செய்திகள்
இலங்கைக்கு 213 வெற்றியிலக்கு

Feb 28, 2026 - 08:52 PM -

0

இலங்கைக்கு 213 வெற்றியிலக்கு

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (28) பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் மோதுகின்றன. 

பல்லேகலை இடம்பெறும் இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. 

இதன்படி முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 212 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 

பாகிஸ்தான் அணி சார்பில் ஷகிப்சடா பர்ஹான் 100 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார். 

இந்நிலையில் 213 என்ற வெற்றியிலக்கை நோக்கி இலங்கை அணி துடுப்பாடவுள்ளது. 

எவ்வாறாயினும் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தெரிவாக வேண்டுமானால், இலங்கை அணியை 147 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அவ்வாறு செய்தால் மாத்திரமே பாகிஸ்தான் அணியால் உலக கிண்ண அரையிறுதிக்கு தெரிவாக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05