செய்திகள்
தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு இலங்கையர்களுக்கு அறிவித்தல்

Feb 28, 2026 - 09:42 PM -

0

தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு இலங்கையர்களுக்கு அறிவித்தல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களையும் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு அந்நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. 

இவ்விடயம் தொடர்பாக அவதானத்துடன் இருக்குமாறும், ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளியுறவு அமைச்சு மற்றும் தூதரகத்தினால் வெளியிடப்படும் பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறும் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. 

தூதரகத்தின் பணிகள் வழக்கம் போல் நடைபெற்று வருவதாகவும், போர்ச் சூழல் தொடர்பான தற்போதைய நிலைமைகளை அவ்வப்போது அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏதேனும் அவசரத் தேவை ஏற்படின், ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள இலங்கையர்கள் பின்வரும் +971 50 931 8538 என்ற WhatsApp இலக்கத்தின் ஊடாகத் தொடர்புகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05