Feb 28, 2026 - 10:36 PM -
0
2026 ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு 20 உலக கிண்ணத் தொடரில் இருந்து பாகிஸ்தான் அரையிறுதிக்கு செல்லாமல் வௌியேறியுள்ளது.
இன்று (28) இடம்பெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 212 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
பாகிஸ்தான் அணி சார்பில் ஷகிப்சடா பர்ஹான் 100 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார்.
இந்நிலையில் 213 என்ற வெற்றியிலக்கை நோக்கி இலங்கை அணி துடுப்பாடவுள்ளது.
எவ்வாறாயினும் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தெரிவாக வேண்டுமானால், இலங்கை அணியை 147 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும் அந்த இலக்கையும் மீறி இலங்கை அணி துடுப்பாடி வருவதால் பாகிஸ்தான் அணி வௌியேறியுள்ளது.
அத்துடன் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

