Feb 28, 2026 - 10:52 PM -
0
உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (28) இடம்பெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 5 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
பல்லேகலை மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 212 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
பாகிஸ்தான் அணி சார்பில் ஷகிப்சடா பர்ஹான் 100 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார்.
இந்நிலையில் 213 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 207 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.
இலங்கை அணி சார்பில் தசுன் சானக்க 76 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.
இப்போட்டியில் இலங்கையை பாகிஸ்தான் அணி வீழ்த்தியிருந்த போதிலும் அந்த அணியால் அரையிறுதிக்காக வாய்ப்பை பெற முடியவில்லை.
அரையிறுதிக்கு தெரிவாக வேண்டுமானால், இலங்கை அணியை 147 ஓட்டங்களுக்குள் பாகிஸ்தான் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும்.
எனினும் இலங்கை அணி 5 ஓட்டங்களால் மாத்திரமே இந்தப் போட்டியில் தோல்வி அடைந்திருந்தது.
இதனால் குழு - 2 இலங்கை, பாகிஸ்தான் அணிகள் தொடரில் இருந்து வௌியேறிய நிலையில் ஓட்ட சராசரி அடிப்படையில் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு நுழைந்ததுடன், இங்கிலாந்து அணியும் தகுதிப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

