செய்திகள்
ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடியது ஈரான்

Mar 1, 2026 - 09:03 AM -

0

ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடியது ஈரான்

ஹோர்முஸ் நீரிணை ஊடாக எந்தவொரு கப்பலுக்கும் பயணிக்க அனுமதி இல்லை என ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. 

ஈரானிய தஸ்னிம் செய்தி நிறுவனம் இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது. 

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இலக்குகளுக்கு எதிராக ஈரானிய ஆயுதப்படைகள் பழிவாங்கும் தாக்குதல்களைத் தொடர்ந்து முன்னெடுத்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 

ஈரானியத் தாக்குதல்களால் இதுவரை 14 அமெரிக்கத் தளங்கள் சேதமடைந்துள்ளதாக அந்தச் செய்தி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. 

இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தொடர்ந்தும் பதற்ற நிலை காணப்படுகின்றது. 

இந்தச் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பிற்காக மத்திய கிழக்கிற்குப் பயணிக்கும் அனைத்து விமான நிறுவனங்களும் தமது விமான சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. 

அத்துடன், மத்திய கிழக்கு நாடுகளும் தமது வான்பரப்புகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளன. 

தற்போதைய பதற்றமான நிலையில், ஹோர்முஸ் நீரிணையை மூடுவதற்கு ஈரான் எடுத்துள்ள தீர்மானம் உலகெங்கிலும் உள்ள பல நாடுகளைப் பாதிக்கும் ஒரு விடயமாக மாறியுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05