Header Logo

சினிமா
விராட் கோலி சாதனையை முறியடித்த ராஷ்மிகா திருமண பதிவு

Mar 1, 2026 - 01:14 PM -

0

விராட் கோலி சாதனையை முறியடித்த ராஷ்மிகா திருமண பதிவு

நடிகை ராஷ்மிகா அவரது காதலர் விஜய் தேவரகொண்டாவை கடந்த பிப்ரவரி 26 ஆம் திகதி கரம்பிடித்தார். மிகவும் நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்துகொண்ட திருமணம் உதய்பூர் அரண்மனையில் நடந்து முடிந்தது. 

திருமண போட்டோக்கள் எதுவும் லீக் ஆக கூடாது என்பதால் கெஸ்ட் ஆக வந்தவர்கள் தொலைபேசிகளை கவர் போட்டு மூடி சீல் வைத்து இருந்தனர். 

அதன் பின் திருமண போட்டோக்களை ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் இன்ஸ்டாக்ராமில் வெளியிட்டு இருந்தனர். 

ராஷ்மிகாவின் இன்ஸ்டா கணக்கில் பதிவிட்ட திருமண போட்டோக்கள் வந்திருக்கும் லைக்குகள் மூலமாக புது சாதனை படைத்திருக்கிறது. 

இதுவரை விராட் கோலி உலகக்கிண்ணத்துடன் பதிவிட்ட போட்டோவுக்கு 22 மில்லியன் லைக்குகள் வந்தது தான் சாதனையாக இருந்தது. அதை தற்போது முறியடித்து இருக்கும் ராஷ்மிகாவின் போட்டோவுக்கு 25 மில்லியன் லைக்குகள் இப்போது வரை வந்திருக்கிறது. 

மேலும் லைக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஆசிய அளவில் புது சாதனையை ராஷ்மிகா படைத்திருக்கிறார்.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title