Mar 1, 2026 - 08:15 PM -
0
கொழும்பு ஆனந்த மற்றும் நாலந்த கல்லூரிகளுக்கு இடையில் 96ஆவது தடவையாக நடைபெற்ற 'சுலோஹித சங்க்ராமய' மாபெரும் கிரிக்கெட் சமர் இன்று (01) வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தது.
கொழும்பு SSC மைதானத்தில் மூன்று நாட்களாக நடைபெற்ற இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய ஆனந்த கல்லூரி தமது முதல் இன்னிங்ஸிற்காக 8 விக்கெட்டுகளை இழந்து 353 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது .
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நாலந்த கல்லூரி தமது முதல் இன்னிங்ஸிற்காக 8 விக்கெட்டுகளை இழந்து 424 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.
இதனைத் தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த ஆனந்த கல்லூரி 6 விக்கெட்டுகளை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்று, நாலந்த கல்லூரிக்கு 100 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் நாலந்த கல்லூரி விக்கெட் இழப்பின்றி 8 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
நீண்ட வரலாற்றைக் கொண்ட இப்போட்டி 1924ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இது கலாநிதி என்.எம். பெரேரா ஞாபகார்த்தக் கிண்ணத்திற்காக ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
இன்றைய போட்டியுடன், இரு கல்லூரிகளுக்கும் இடையில் இதுவரை நடைபெற்ற 77 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளன. ஆனந்த கல்லூரி 12 போட்டிகளிலும், நாலந்த கல்லூரி 7 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

