Mar 1, 2026 - 08:51 PM -
0
டி20 உலகக் கிண்ணத் தொடரின் 'சூப்பர் 8' சுற்றின் 52ஆவது லீக் ஆட்டத்தில் இந்திய அணிக்கு 196 ஓட்டங்களை வெற்றி இலக்காக மேற்கிந்தியத் தீவுகள் அணி நிர்ணயித்துள்ளது.
இந்தியாவின் கொல்கத்தாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது.
இரு அணிகளுக்கும் இது ஒரு 'வாழ்வா சாவா' போட்டியாகும். இந்த வெற்றியே அரையிறுதிக்கு முன்னேறும் அணியைத் தீர்மானிக்கும் என்பதால், இப்போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்து, மேற்கிந்தியத் தீவுகள் அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 195 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
அவ்வணி சார்பில் ரொஸ்டன் சேஸ் அதிகபட்சமாக 40 ஓட்டங்களைப் பெற்றார். அதேபோல், ரொவ்மன் பவல் 34 ஓட்டங்களுடனும், ஜேசன் ஹோல்டர் 37 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
பந்துவீச்சில் இந்திய அணி சார்பில் ஜஸ்ப்ரித் பும்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

