Header Logo

வடக்கு
பருத்தித்துறை கடலில் காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு!

Mar 2, 2026 - 10:03 AM -

0

பருத்தித்துறை கடலில் காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு!

வடமராட்சி வடக்கு, பருத்தித்துறை கடலில் தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போன மீனவர் நேற்று (01) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, 

கடந்த 27 ஆம் திகதி இரவு கடலுக்குச் சென்ற குறித்த மீனவர் பயணித்த படகின் இயந்திரத்தில் தூண்டில் கயிறு சிக்கியது. அதனை சீர்செய்ய முற்பட்ட போது கடலில் வீழ்ந்து காணாமல் போனதாகக் எமது செய்தியாளர் தெரிவித்தார். 

பின்னர் அவருடன் சென்ற சக மீனவர் தகவல் வழங்கியதைத் தொடர்ந்து பருத்தித்துறை கொட்டடிப் பகுதி மீனவர்கள் சுமார் 25 இற்கு மேற்பட்ட படகுகளில் தேடுதல் செய்து சடலத்தை மீட்டு நேற்று காலை 10 மணியளவில் கரை சேர்த்துள்ளனர். 

சடலமாக மீட்கப்பட்ட மீனவர் பருத்தித்துறை கொட்டடியைச் சேர்ந்த விஜயகுமார் நிக்சன் (23) என்ற ஒரு பிள்ளையின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

இச்சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

--

Comments
0

MOST READ

காணொளி
காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

title