Mar 2, 2026 - 10:09 AM -
0
நிட்டம்புவ - ரணவிருகம சந்திக்கு அருகில் அடையாளம் காணப்படாத நபரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபர் சுமார் 60 முதல் 65 வயதுக்கு இடைப்பட்டவர் எனவும், 5 அடி 3 அங்குல உயரமுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், அவர் வெள்ளை நிறக் கோடுகள் இடப்பட்ட சாரம் ஒன்றை அணிந்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அவர் முகம் முழுவதும் தாடி வளர்த்திருந்த நபர் எனவும் பொலிஸார் விபரித்துள்ளனர்.
மீட்கப்பட்ட சடலம் தற்போது வத்துபிட்டிவல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

