Header Logo
Mogo Academy

விளையாட்டு
கோலி, ரோகித்தை முந்தி புதிய சாதனை படைத்த சஞ்சு சாம்சன்

Mar 2, 2026 - 11:50 AM -

0

கோலி, ரோகித்தை முந்தி புதிய சாதனை படைத்த சஞ்சு சாம்சன்
Mobitel inner

டி20 உலகக் கிண்ண தொடரின் 52 ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான போட்டி நேற்று (02) நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற இந்தியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணிகள் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 195 ஓட்டங்கள் குவித்தது. 

இதனையடுத்து துடுப்பெடுத்தாடிய இந்தியா 19.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 199 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், அரையிறுதிக்கும் முன்னேறி அசத்தியது. அதிரடியாக ஆடி 97 ஓட்டங்கள் குவித்து இந்திய அணியை வெற்றிபெற வைத்த சஞ்சு சாம்சனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. 

சஞ்சு சாம்சனின் இந்த அபார ஆட்டத்தின் மூலம் டி20 உலக கிண்ண தொடரில் ஒரு இன்னிங்ஸில் அதிக ஓட்டங்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் 2 ஆவது இடத்திற்கு அவர் முன்னேறினார். 

2010 ஆண்டு தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் 101 ஓட்டங்கள் குவித்த சுரேஷ் ரெய்னா ஒரு இன்னிங்ஸில் அதிக ஓட்டங்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். தற்போது ஆட்டமிழக்கமால் 97 ஓட்டங்கள் அடித்து 2 ஆவது இடத்திற்கு சஞ்சு சாம்சன் முன்னேறினார். 92 ஓட்டங்களுடன் ரோகித் 3 ஆம் இடத்திலும், 89 ஓட்டங்களுடன் கோலி 4 ஆம் இடத்திலும் உள்ளனர்.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara