Header Logo

சினிமா
'மஞ்சும்மல் பாய்ஸ்' இயக்குனர் மீது பாலியல் புகார்!

Mar 2, 2026 - 12:34 PM -

0

'மஞ்சும்மல் பாய்ஸ்' இயக்குனர் மீது பாலியல் புகார்!

பட்டிதொட்டி எங்கும் பட்டைய கிளப்பிய படம் தான் 'மஞ்சும்மல் பாய்ஸ்'. இந்த படத்தை இயக்கியவர் சிதம்பரம். படத்தின் வெற்றியின் மூலம் பிரபலமான இவர் மீது இளம்பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். 

கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள எலம்குளம் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் இளம்பெண் ஒருவர் எர்ணாகுளம் தெற்கு பொலிஸில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். 

இயக்குனர் சிதம்பரம், தனது பிளாட்டில் புகுந்து பாலியல் நோக்கத்துடன் தவறாக நடந்து கொண்டதாக புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் இயக்குனர் சிதம்பரம் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐ.பி.சி. பிரிவு 74 மற்றும் 75-ன் கீழ் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும், விரைவில் இயக்குனர் சிதம்பரத்திடம் விசாரணை நடத்தப்படும் என்றும் எர்ணாகுளம் தெற்கு பொலிஸார் தெரிவித்தனர். தேவைப்பட்டால் கைது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title