Header Logo
Mogo Academy

விளையாட்டு
வீரர்களுக்கு அபராதம் விதித்த பாக். கிரிக்கெட் வாரியம்!

Mar 2, 2026 - 04:45 PM -

0

வீரர்களுக்கு அபராதம் விதித்த பாக். கிரிக்கெட் வாரியம்!
Mobitel inner

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் டி20 உலகக் கிண்ண 2026 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியது. நடப்பு டி20 தொடரில் மோசமான ஆட்டம் காரணமாக பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுடன் வெளியேறியது. பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறாதது அந்நாட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வருத்தம் மற்றும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. 

இதைத் தொடர்ந்து அந்நாட்டு ரசிகர்கள் பாகிஸ்தான் வீரர்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இந்த நிலைமை சற்று மாறத் தொடங்கிய நிலையில், டி20 உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேறிய பாகிஸ்தான் அணி மீண்டும் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகி உள்ளது. 

இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி, உலகக் கிண்ண தொடரில் மோசமான ஆட்டம் காரணமாக சூப்பர் 8 சுற்றோடு வெளியேறிய பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

அதன்படி, மோசமான ஆட்டம் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது வீரர்களுக்கு இந்திய மதிப்பில் 16 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், க்ரூப் சுற்று போட்டியில் பாகிஸ்தான் அணி இந்தியா அணியிடம் தோல்வி அடைந்தது தான் இந்த நடவடிக்கைக்கு முக்கிய காரணம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara