Header Logo

வணிகம்
சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு நிதி வசதிகளை வழங்க Pan Asia வங்கியுடன் கைக்கோர்க்கும் Fairway Latitude

Mar 5, 2026 - 10:48 AM -

0

சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு நிதி வசதிகளை வழங்க Pan Asia வங்கியுடன் கைக்கோர்க்கும் Fairway Latitude

இலங்கையின் சொகுசு மாடி குடியிருப்பு திட்டங்களில் முன்னோடியான Fairway Properties நிறுவனம், தனது ஏழாவது சொகுசு அடுக்குமாடி குடியிருப்புத் திட்டமான Fairway Latitude இல் வீடுகளை கொள்வனவு செய்பவர்களுக்கு வசதியாக, வீட்டு நிதித் தீர்வுகளை வழங்குவதற்காக Pan Asia Banking Corporation PLC உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது. இது இலங்கையில் உயர்தர நகர்ப்புற வாழ்க்கை அனுபவங்களை வழங்குவதில் நிறுவனத்தின் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறது. 

இந்த ஒப்பந்தத்தின் மூலம், Fairway Latitude, கொள்வனவாளர் மற்றும் வங்கி ஆகிய மூன்று தரப்பினருக்கும் இடையிலான முத்தரப்பு ஒப்பந்தங்கள் ஊடாக Pan Asia வங்கியின் வீட்டுக் கடன் வசதிகளை எளிதாக வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும். இது பாதுகாப்பான, வெளிப்படையான மற்றும் நெறிப்படுத்தப்பட்ட கொள்வனவுச் செயன்முறையை உறுதி செய்கிறது. 

இந்த பங்காளித்துவத்தின் மூலம், Fairway Latitude இல் முதலீடு செய்யும் வாடிக்கையாளர்கள், வங்கியின் நெகிழ்வான வீடமைப்புக் கடன் திட்டங்கள், போட்டித்தன்மை வாய்ந்த வட்டி வீதங்கள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட வங்கிச் சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். இதன் மூலம் நவீன நகர்ப்புற வீட்டு உரிமையாளர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்கின்ற Fairway இன் அதிநவீன குடியிருப்பில் ஒரு இல்லத்தை அவர்கள் உறுதிப்படுத்த முடியும். 

இந்த ஒப்பந்தம் குறித்து Fairway Holdings நிறுவனத்தின் தலைவர் விராத் டி அல்விஸ் கருத்துத் தெரிவிக்கையில், Fairway Latitude எமது சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு வரிசையில் அடுத்த அத்தியாயத்தை பிரதிபலிக்கிறது. Pan Asia வங்கியுடனான இந்த பங்காளித்துவம் எமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் மதிப்பை மேலும் மேம்படுத்த அனுமதிக்கிறது. நிதி வசதிகளை இலகுவாக அணுகுவதன் மூலம், அனைவருக்கும் தரமான மற்றும் சிறந்த வடிவமைப்புடன் கூடிய சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு உரிமையை சாத்தியமாக்குவதை நாம் நோக்கமாகக் கொண்டுள்ளோம். என்றார். 

Pan Asia வங்கியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான நளின் எதிரிசிங்க தெரிவிக்கையில், Fairway Latitude திட்டத்திற்காக Fairway Properties உடன் இணைவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். நவீன வீட்டு உரிமையாளர்களின் மாறிவரும் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட நிதித் தீர்வுகளுடன் உயர்தர குடியிருப்பு மேம்பாடுகளை ஆதரிப்பதில் Pan Asia வங்கி கொண்டுள்ள தொடர்ச்சியான ஆர்வத்தை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பிரதிபலிக்கிறது. என்றார். 

Fairway Latitude திட்டத்தின் கட்டுமான பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை ஆறு தளங்கள் நிறைவடைந்துள்ளன. திட்டங்களை துல்லியமாகவும் உரிய காலத்திலும் நிறைவு செய்வதில் Fairway Holdings கொண்டுள்ள வலுவான திறனை இது வெளிப்படுத்துகிறது. Fairway Holdings இலங்கையின் முன்னணி ரியல் எஸ்டேட் நிர்மாணதாரர் ஆகும். உயர் தரமான வேலைப்பாடுகள், நவீன வடிவமைப்பு, மிகுந்த அக்கறையுடன் வடிவமைக்கப்பட்ட அம்சங்கள் என இந்நிறுவனம் பெயர்பெற்று விளங்குகின்றது. இதுவரை ஆறுக்கும் மேற்பட்ட வெற்றிகரமான சொகுசு குடியிருப்பு திட்டங்களை நிறைவு செய்து, 1,000 இற்கும் மேற்பட்ட குடியிருப்புகளை கையளித்துள்ள Fairway, கொழும்பின் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு சூழலை தொடர்ச்சியாக ஒழுங்குபடுத்தி வருகிறது. 

Pan Asia Bank PLC ஆனது, இலங்கையின் அனுமதிப்பத்திரம் பெற்ற வணிக வங்கியாகும். இது வீடமைப்பு கடன்கள், பெருநிறுவன வங்கிச் சேவைகள், SME நிதித் திட்டங்கள், டிஜிட்டல் வங்கிச் சேவைகள் உள்ளிட்ட விரிவான நிதித் தீர்வுகளை வழங்குகிறது. நாட்டின் பொருளாதாரத்தின் முக்கிய துறைகளின் நிலைபேறான வளர்ச்சிக்கு ஆதரவளிக்கின்ற, வாடிக்கையாளர்களை மையப்படுத்திய நிதித் தீர்வுகளை வழங்குவதில் இவ்வங்கி உறுதியாக விளங்குகின்றது. இந்த ஒப்பந்தம் Fairway Properties மற்றும் Pan Asia வங்கி ஆகியவற்றுக்கு இடையிலான நீண்டகால பங்காளித்துவத்தை மேலோங்கச் செய்வதுடன், இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்கிறது.

Comments
0

MOST READ

காணொளி
நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

title