Header Logo

வணிகம்
Peoples Excellency விருதை வென்றுள்ள Minasro College இன் வருடாந்த விளையாட்டு விழா வெற்றிகரமாக நிறைவு

Mar 5, 2026 - 11:08 AM -

0

Peoples Excellency விருதை வென்றுள்ள Minasro College இன் வருடாந்த விளையாட்டு விழா வெற்றிகரமாக நிறைவு

முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வியில் பூரண ஆளுமை விருத்தியை ஊக்குவிக்கும் சிறந்த பாடசாலையாக Peoples Excellency விருதை வென்றுள்ள Minasro College, 2026 பெப்ரவரி மாதம் 08 ஆம் திகதியன்று கொழும்பிலுள்ள சுகததாச மைதானத்தில் தனது நான்காவது வருடாந்த விளையாட்டு விழாவை வெகு விமரிசையாக நடாத்தியது. இந்த தேசிய அளவிலான வெற்றி மற்றும் விளையாட்டு விழா, பாடசாலையின் கல்வித் தொலைநோக்குப் பார்வை மற்றும் மாணவர் மேம்பாட்டிற்கான தொடர்ச்சியான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. 

Peoples Excellency விருதானது, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி மட்டங்களில் மாணவர்களுக்கு முழுமையான மற்றும் சமநிலையான கல்வியை வழங்குவதற்கு பாடசாலை கொண்டுள்ள அர்ப்பணிப்புக்கு சான்று பகிர்கிறது. கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களை நம்பிக்கை கொண்ட, சர்வதேச அளவில் திறமையான பிரஜைகளாக மாற்றுவதற்கு இக்கல்லூரி ஆற்றி வரும் பணி இந்த விருது மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.. இந்த விருது கல்லூரியின் பணிப்பாளர்களான கலாநிதி மேஜர் அநுர கன்னங்கர மற்றும் திருமதி புஷ்பா ஹெட்டிஆரச்சி உள்ளிட்ட கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்களின் அர்ப்பணிப்பை பிரதிபலிப்பதாக உள்ளது. 

கல்லூரியின் நான்காவது வருடாந்த விளையாட்டு விழா உற்சாகம், ஒழுக்கம் மற்றும் குழு மனப்பான்மையின் கொண்டாட்டமாக அமைந்தது. தரம் 1 முதல் தரம் 6 வரையிலான மாணவர்கள் விளையாட்டு, குழுப் போட்டிகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பெரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். வண்ணமயமான அணிவகுப்புகள் மற்றும் கண்கவர் விளையாட்டு போட்டிகள் விளையாட்டு விழாவை சிறப்பாக்கியதோடு ஏராளமான பெற்றோர்கள் மற்றும் விருந்தினர்கள் பங்கேற்றிருந்தமை மாணவர்களின் உற்சாகத்தை மேலும் அதிகரித்தது. 

Good Start, Grow Smart என்ற கருப்பொருளின் கீழ், மினாஸ்ரோ கல்லூரி கல்விச் சிறப்பு, குணநலன் விருத்தி மற்றும் உடல் திறன்களை ஒருங்கிணைத்து ஒரு முழுமையான கல்விக் கட்டமைப்பை கட்டியெழுப்பி வருகிறது. Peoples Excellency வெற்றி மற்றும் விளையாட்டு விழாவை வெற்றிகரமாக ஏற்பாடு செய்ததன் மூலம் எதிர்காலத்துக்கு தயாராகவுள்ள, முழுமையான பிரஜைகளை உருவாக்குவதில் கல்லூரிக்குள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பு வெளிப்படுகிறது.. மினாஸ்ரோ மத்துகம கிளை மார்ச் மாதத்தில் பூரண வசதிகள் மற்றும் பாதுகாப்பான வளாகத்துடன் திறக்கப்படவுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

title