Header Logo
Vallibel FD
Selan Bank
வணிகம்
டிஜிட்டல் இணைப்பில் Huawei நிறுவனம் புதிய மைல்கல்: 17 கோடி மக்களுக்கு இணைய வசதி வழங்கி சாதனை

Mar 5, 2026 - 11:12 AM

டிஜிட்டல் இணைப்பில் Huawei நிறுவனம் புதிய மைல்கல்: 17 கோடி மக்களுக்கு இணைய வசதி வழங்கி சாதனை
Mobitel Inner 1278

உலகின் 80-க்கும் மேற்பட்ட நாடுகளிலுள்ள தொலைதூர மற்றும் பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் சுமார் 17 கோடி (170 மில்லியன்) மக்களுக்கு டிஜிட்டல் இணைப்பு வசதியை வழங்கியுள்ளதாக Huawei நிறுவனம் அறிவித்துள்ளது. சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் (ITU) ‘Partner2Connect’ (P2C) டிஜிட்டல் கூட்டணியின் கீழ் தான் அளித்திருந்த உறுதிமொழியை விடவும் கூடுதலான இலக்கை எட்டி, அந்நிறுவனம் இந்தச் சாதனையைப் படைத்துள்ளது. 

பார்சிலோனாவில் நடைபெற்ற நிறுவனத்தின் டெக் கேர்ஸ் (TECH Cares) மாநாட்டில் உரையாற்றிய Huawei ICT Business Group இன் பிரதம நிறைவேற்று அதிகாரி Yang Chaobin இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அவர் அங்கு பேசுகையில், “2025-ஆம் ஆண்டிற்குள் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் 12 கோடி (120 மில்லியன்) மக்களுக்கு டிஜிட்டல் இணைப்பை வழங்குவோம் என 2022-ஆம் ஆண்டு ITU P2C கூட்டணியிடம் Huawei நிறுவனம் உறுதியளித்திருந்தது. தற்போது அந்த இலக்கை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்பே கடந்து சாதனை படைத்துள்ளோம்,” எனக் குறிப்பிட்டார். மேலும், இந்த மைல்கல்லை எட்டுவதற்குத் துணையாக நின்று ஒத்துழைப்பு வழங்கிய Huawei நிறுவனத்தின் தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்கள் மற்றும் கூட்டாளர் நிறுவனங்களுக்கு அவர் தனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார். 

இந்த மாநாட்டில், பல்வேறு நாடுகளின் அரசாங்கங்கள், தொழில்துறை அமைப்புகள், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் கூட்டாளர் அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 80 பிரதிநிதிகள் பங்கேற்றனர். செயற்கை நுண்ணறிவு (AI) யுகத்தில், டிஜிட்டல் உள்ளடக்கம் அனைவரையும் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து இதில் விரிவான விவாதங்கள் நடைபெற்றன. குறிப்பாக, இதற்கான நடைமுறைச் சாத்தியமான தீர்வுகள் மற்றும் பல்வேறு தரப்பு பங்குதாரர்களுக்கிடையிலான வலுவான ஒத்துழைப்பு ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. 

இம்மாநாட்டின் தொடக்க உரையை நிகழ்த்திய Yang Chaobin, AI தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகின்ற போதிலும், உலக அளவில் நிலவும் டிஜிட்டல் இடைவெளி இன்னும் ஒரு பெரும் சவாலாகவே இருந்து வருவதைச் சுட்டிக்காட்டினார். உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், இந்த இடைவெளி எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கக்கூடும் என அவர் எச்சரித்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், “அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான ஒரு AI யுகத்தை உருவாக்குவதற்கு, அதிவேக டிஜிட்டல் வலையமைப்புகளும் வலுவான கணினித் திறனும் மிக முக்கியமான அடிப்படைத் தேவைகளாகும்,” என்று வலியுறுத்தினார். ITU P2C உறுதிமொழியை Huawei நிறுவனம் வெற்றிகரமாக நிறைவேற்றியிருப்பது, புத்தாக்கத்தின் மீதான அதன் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. மேம்பட்ட டிஜிட்டல் இணைப்புகளின் மூலம், பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான சுகாதாரம், கல்வி மற்றும் நிதிச் சேவைகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யத் தொடர்ந்து பாடுபடுவோம் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார். 

சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் (ITU) தொலைத்தொடர்பு மேம்பாட்டுப் பணியகத்தின் பணிப்பாளர் Cosmas Zavazava டிஜிட்டல் இடைவெளியைக் குறைக்க Huawei நிறுவனம் மேற்கொண்டு வரும் முயற்சிகளை வெகுவாகப் பாராட்டினார். அவர் தனது உரையில், “கிராமப்புற மற்றும் பின்தங்கிய கசமூகங்களை டிஜிட்டல் முறையில் இணைப்பதற்குப் புத்தாக்கமான வணிக மாதிரிகள், அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறை மற்றும் தகவல் தொடர்பு வளங்களின் திறம்பட்ட பயன்பாடு ஆகியவை மிக அவசியமானவை. அதேபோல், சமூகப் ஈடுபாடு மற்றும் உள்ளூர் திறன்களை மேம்படுத்துவதில் தொடர்ச்சியான முதலீடுகளும் அவசியம்,” என்று சுட்டிக்காட்டினார். மேலும், “அனைவருக்குமான அர்த்தமுள்ள இணைய இணைப்பை வழங்குவதில் Huawei நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை நான் பாராட்டுகிறேன். எங்களது இந்த வலுவான மற்றும் வெற்றிகரமான கூட்டாண்மை குறித்து நான் பெருமிதம் கொள்கிறேன்,” என்றும் அவர் தெரிவித்தார். 

Huawei நிறுவனத்தின் பொது விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு பிரிவின் தலைவர் ஜெஃப் வாங் (Jeff Wang) கூறுகையில், மின்னணு உள்ளடக்கம் என்பது அனைவரையும் உள்ளடக்கிய இணைப்பு (Digital Skills Empowerment) மற்றும் டிஜிட்டல் திறன் மேம்பாடு (Inclusive Connectivity) ஆகிய இரண்டு முக்கிய தூண்களின் அடிப்படையில் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டார். சமூகத்தில் நிலவும் டிஜிட்டல் திறன் இடைவெளியைக் குறைப்பதற்காக, Huawei நிறுவனம் பல்வேறு நாடுகளின் அரசாங்கங்கள் மற்றும் அமைப்புகளுடன் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் முதியோர்களைச் சென்றடையும் வகையில் டிஜிட்டல் வசதிகளை விரிவுபடுத்துதல், அவர்களுக்குத் தேவையான டிஜிட்டல் பயிற்சிகளை வழங்குதல் மற்றும் STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) பாடத்திட்டங்களை மேம்படுத்துதல் போன்ற ஆக்கபூர்வமான பணிகளை முன்னெடுத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். 

2019 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட Huawei நிறுவனத்தின் ‘Skills on Wheels’ எனும் நடமாடும் டிஜிட்டல் பயிற்சித் திட்டத்தின் மூலம், இதுவரை 21 நாடுகளைச் சேர்ந்த ஒரு லட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளனர். வசதிகள் குறைந்த மற்றும் பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்குப் புதிய வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குவதில் இத்திட்டம் மிக முக்கியப் பங்காற்றி வருகின்றது. 

இந்த மாநாட்டில் MTN குழுமத்தின் நிலைபேறாண்மை மற்றும் பகிரப்பட்ட மதிப்பு (Sustainability and Shared Value) பிரிவின் நிறைவேற்று அதிகாரி மரினா மடாலே (Marina Madale) பேசுகையில், “இணைய இணைப்பு என்பது சிலருக்கான சலுகை அல்ல, அது ஆப்பிரிக்காவின் வளர்ச்சிக்குத் தேவையான மிக முக்கியமான அடிப்படை உட்கட்டமைப்பு வசதியாகும்,” என்று வலியுறுத்தினார். Jeff Wang இன் கருத்துக்களோடு இணங்கிப்போகும் வகையில், கிராமப்புற இணைய இணைப்புகளை விரிவுபடுத்துதல், தகவல் தொடர்பு சாதனங்களை மக்கள் எளிதில் வாங்கும் வகையில் விலையைக் குறைத்தல் மற்றும் டிஜிட்டல் மற்றும் AI சார்ந்த திறன்களை வளர்த்தெடுத்தல் ஆகியவற்றுக்குத் தங்கள் நிறுவனம் முன்னுரிமை அளித்து வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார். 

2017 ஆம் ஆண்டு முதல் கிராமப்புற வலையமைப்புப் புத்தாக்கத்தில் Huawei நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இணைய வசதிகளைக் குறைந்த செலவில் வழங்குவதையும், அவற்றை எளிதாக நிறுவுவதையும் நோக்கமாகக் கொண்டு தனது Rural Series தீர்வுகளைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகின்றது. இதன் ஒரு மைல்கல்லாக, கடந்த 2025 நவம்பரில் Huawei RuralCow எனும் புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது. நைஜீரியாவின் எம்டிஎன் (MTN Nigeria) நிறுவனத்தின் ஆதரவுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டம், சுமார் 1,500 குடியிருப்பாளர்களைக் கொண்ட சிறிய கிராமங்களுக்கும் உயர்தர இணைய இணைப்பை வழங்குகிறது. இத்தகைய தீர்வுகள் 170 மில்லியன் இணைப்பு எனும் மைல்கல்லை எட்டுவதற்குப் பங்களித்துள்ளதோடு, உள்ளூர் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும் டிஜிட்டல் பொதுச் சேவைகளுக்கான அணுகலை விரிவுபடுத்தவும் உதவியுள்ளன. இந்த மாநாட்டின் போது, Huawei நிறுவனத்துடன் இணைந்து மேற்கொண்டு வரும் பல்வேறு திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்துப் பிரதிநிதிகள் விரிவாகப் பகிர்ந்து கொண்டனர். 

அத்துடன், எதிர்வரும் காலங்களில் இந்த ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும், விரிவுபடுத்தவும் தாங்கள் தயாராக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். AI யுகத்தில் டிஜிட்டல் உள்ளடக்கம் அனைவரையும் சென்றடைய வேண்டுமானால், அரசாங்கங்கள், சேவை வழங்குநர்கள், சர்வதேச அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகிய அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதில் பங்கேற்பாளர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தை வெளிப்படுத்தினர். 

s எதிர்காலத்தை நோக்கி, கிராமப்புற வலையமைப்புத் தொழில்நுட்பங்களில் புத்தாக்கத்தைத் தொடர்ந்து முன்னெடுப்பதோடு, திறந்த ஒத்துழைப்பை மேம்படுத்தவும், டிஜிட்டல் திறன் வலுவூட்டலை (விரைவுபடுத்தவும் Huawei நிறுவனம் உறுதிபூண்டுள்ளது. இத்தகைய ஆக்கபூர்வமான செயல்பாடுகள் மூலம், உலகெங்கிலும் சமத்துவமான மற்றும் நிலையான ஒரு டிஜிட்டல் சூழலை உருவாக்குவதற்கு நிறுவனம் தனது பங்களிப்பைத் தொடர்ந்து வழங்கும்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
முழு நாட்டிற்கும் முக்கியமானதொன்று!

முழு நாட்டிற்கும் முக்கியமானதொன்று!

பாராளுமன்றில் ஜீவன் - கலைச்செல்வி காரசாரமான விவாதம்!

பாராளுமன்றில் ஜீவன் - கலைச்செல்வி காரசாரமான விவாதம்!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

நல்லூர் கொடியிறக்கம்!

நல்லூர் கொடியிறக்கம்!

பொய்களைக் கூறி மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்!

பொய்களைக் கூறி மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்!

குறிஞ்சித் தமிழ் வித்தியாலயத்தை மீளத் திறக்கக் கோரி போராட்டம்!

குறிஞ்சித் தமிழ் வித்தியாலயத்தை மீளத் திறக்கக் கோரி போராட்டம்!

சீதா அம்மன் ஆலயத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

சீதா அம்மன் ஆலயத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

கொழும்பில் இருந்துகொண்டு குறைகளைச் சொல்கிறார்கள்!

கொழும்பில் இருந்துகொண்டு குறைகளைச் சொல்கிறார்கள்!

ஹிஸ்புல்லா கோரிக்கை!

ஹிஸ்புல்லா கோரிக்கை!

முஸ்லிம் பெண்கள் கல்வியில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்!

முஸ்லிம் பெண்கள் கல்வியில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்!

Mobitel 1278