Header Logo
Mogo Academy

விளையாட்டு
பெண் ஊழியரிடம் அத்துமீறிய பாக். வீரர்?

Mar 7, 2026 - 11:15 AM -

0

பெண் ஊழியரிடம் அத்துமீறிய பாக். வீரர்?
Mobitel inner

டி20 உலகக் கிண்ண 2026 தொடரின் போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சல்மான் மிர்சா ஒரு பெரிய சர்ச்சையில் சிக்கினார். உலகக் கிண்ணத்தின் போது ஒரு பெண்ணிடம் அவர் தவறாக நடந்து கொண்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. 

இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பி.சி.பி.) அந்தக் குற்றச்சாட்டுகளை வீரரின் பெயரை குறிப்பிடாமல் நிராகரித்து விட்டது. இந்த நிலையில், மிர்சா சமூக வலைத்தளத்தில் தனது பெயரை பாதுகாக்கும் நோக்கில், தனக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாகவும், அந்த செயல் 'மலிவான பத்திரிகை' என்று கூறியுள்ளார். 

இதுகுறித்த பதிவில் அவர், "ஒரு அபத்தமான செய்தி ஊடகங்களில் பரவி வருகிறது, இந்த வகையான மலிவான பத்திரிகையை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். எந்த ஊடக நிறுவனமும் சரிபார்க்கப்படாத எந்த செய்தியையும் ஒளிபரப்ப முடியாது. 

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே இந்த ஆதாரமற்ற மற்றும் போலி செய்தியை மறுத்துள்ளது, மேலும் குறித்த செய்தி நிறுவனத்தில் பணிபுரியும் பத்திரிகையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போகிறேன். இந்த வகையான மோசமான செய்திகளை தடை செய்ய வேண்டும், மேலும் பாகிஸ்தான் அரசாங்கம் அத்தகையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார். 

முன்னதாக இது தொடர்பான செய்தி வெளியான போதே, அந்த தகவலில் துளியும் உண்மை இல்லை என்று மறுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், சம்பந்தப்பட்ட செய்தியாளர் இந்த விஷயத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara