Header Logo

செய்திகள்
அமெரிக்காவிற்கு ஈரான் சவால்: ஹார்முஸ் நீரிணையில் பதற்றம்

Mar 7, 2026 - 04:55 PM -

0

அமெரிக்காவிற்கு ஈரான் சவால்: ஹார்முஸ் நீரிணையில் பதற்றம்

ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் எண்ணெய் தாங்கிக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்க அமெரிக்கக் கடற்படைக் கப்பல்களை ஈடுபடுத்துமாறு ஈரான் புரட்சிகரப் படையின் பேச்சாளர் ஒருவர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு சவால் விடுத்துள்ளதாக ஈரானிய அரச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தேவையேற்படின், ஹார்முஸ் நீரிணை ஊடாகப் பயணிக்கும் எண்ணெய் தாங்கிக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் பணிகளை அமெரிக்கக் கடற்படை ஆரம்பிக்கலாம் என டொனால்ட் ட்ரம்ப் கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தார்.

இதேவேளை, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் மோதல் நிலைமைகள் காரணமாக ஹார்முஸ் நீரிணை ஊடான கடல்வழிப் போக்குவரத்து மற்றும் எரிசக்தி ஏற்றுமதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றாகக் கருதப்படும் ஹார்முஸ் நீரிணை ஊடாகத் தினமும் பெருமளவிலான எண்ணெய் கொண்டு செல்லப்படுகின்றது. இதன் பாதுகாப்பு குறித்த பிரச்சினைகள் எழுந்துள்ளமை உலகளாவிய எரிசக்தி சந்தையிலும் தாக்கங்களை ஏற்படுத்தலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கடந்த சனிக்கிழமை அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல்களைத் தொடுக்க ஆரம்பித்தது முதல், குறைந்தது ஒன்பது கப்பல்களாவது தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. இதன்காரணமாக, இந்த மூலோபாய நீர்வழிப்பாதையூடாகப் பயணிக்க வேண்டாம் என புரட்சிகரப் படை கப்பல்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணையின் பாதுகாப்பு குறித்து இவ்வாறு எழுந்துள்ள பிரச்சினைகள், உலகளாவிய எரிசக்தி சந்தையில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றன.

Comments
0

MOST READ

காணொளி
செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

ஹஜ்ஜுப் பெருநாள் என்பது தியாகத்தின் பெருநாளாகும்!

ஹஜ்ஜுப் பெருநாள் என்பது தியாகத்தின் பெருநாளாகும்!

தோற்றுப்போனவர்கள் எங்களுக்கு சவால் விடுகிறார்கள்!

தோற்றுப்போனவர்கள் எங்களுக்கு சவால் விடுகிறார்கள்!

மக்களுடைய காணிகளை மக்களுக்கே வழங்க வேண்டும்!

மக்களுடைய காணிகளை மக்களுக்கே வழங்க வேண்டும்!

2 மாதங்களுக்குள் எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும்!

2 மாதங்களுக்குள் எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும்!

மூன்றாம் கட்ட அகழ்வுப்பணியின் 9 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப்பணியின் 9 ஆம் நாள்!

மட்டக்களப்பையும் தமிழகத்திற்கு கொடுத்து விடுங்கள்!

மட்டக்களப்பையும் தமிழகத்திற்கு கொடுத்து விடுங்கள்!

விஜய் இலங்கை வருவார் என நம்புகிறோம்!

விஜய் இலங்கை வருவார் என நம்புகிறோம்!

title