Header Logo

செய்திகள்
இஸ்ரேலுக்கு 20,000 குண்டுகளை விற்க ட்ரம்ப் நிர்வாகம் அனுமதி

Mar 8, 2026 - 09:44 AM -

0

இஸ்ரேலுக்கு 20,000 குண்டுகளை விற்க ட்ரம்ப் நிர்வாகம் அனுமதி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், சுமார் 650 மில்லியன் டொலர் மதிப்பிலான 20,000-க்கும் மேற்பட்ட குண்டுகளை இஸ்ரேலுக்கு விற்பனை செய்வதற்கு அனுமதி அளித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க காங்கிரஸைத் தவிர்த்து ட்ரம்ப் நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

இதற்கமைய, இஸ்ரேலுக்கு உடனடியாக அவற்றை விற்பனை செய்ய வேண்டிய அவசர நிலை உள்ளதாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ தீர்மானித்துள்ளதாகவும், இதற்காக ஆயுத விற்பனை மீதான காங்கிரஸ் மதிப்பாய்வுத் தேவைகள் கைவிடப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த விற்பனையானது அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைக்கும் தேசிய பாதுகாப்பிற்கும் பங்களிக்கும் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளதுடன், இதன் பிரதான ஒப்பந்ததாரராக டெக்சாஸில் அமைந்துள்ள 'ரெப்கான்' நிறுவனம் செயற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக, நேரடி வர்த்தகப் பரிவர்த்தனைகள் மூலம் மேலும் 298 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான போர் ஆயுதங்களை இஸ்ரேல் கொள்வனவு செய்யவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

Comments
0

MOST READ

காணொளி
செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

ஹஜ்ஜுப் பெருநாள் என்பது தியாகத்தின் பெருநாளாகும்!

ஹஜ்ஜுப் பெருநாள் என்பது தியாகத்தின் பெருநாளாகும்!

தோற்றுப்போனவர்கள் எங்களுக்கு சவால் விடுகிறார்கள்!

தோற்றுப்போனவர்கள் எங்களுக்கு சவால் விடுகிறார்கள்!

மக்களுடைய காணிகளை மக்களுக்கே வழங்க வேண்டும்!

மக்களுடைய காணிகளை மக்களுக்கே வழங்க வேண்டும்!

2 மாதங்களுக்குள் எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும்!

2 மாதங்களுக்குள் எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும்!

மூன்றாம் கட்ட அகழ்வுப்பணியின் 9 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப்பணியின் 9 ஆம் நாள்!

மட்டக்களப்பையும் தமிழகத்திற்கு கொடுத்து விடுங்கள்!

மட்டக்களப்பையும் தமிழகத்திற்கு கொடுத்து விடுங்கள்!

விஜய் இலங்கை வருவார் என நம்புகிறோம்!

விஜய் இலங்கை வருவார் என நம்புகிறோம்!

title