Header Logo
Mogo Academy

விளையாட்டு
உலகக் கிண்ணத்தில் அதிக விக்கெட்டுகள்!

Mar 10, 2026 - 10:45 AM -

0

உலகக் கிண்ணத்தில் அதிக விக்கெட்டுகள்!
Mobitel inner

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்ற டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி புது சாதனைகளை படைத்தது. நியூசிலாந்து அணிக்கு எதிராக கடந்த 08 ஆம் திகதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வெறும் 15 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதன் மூலம் இந்திய அணி 96 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது. டி20 உலகக் கிண்ண வெற்றியைத் தொடர்ந்து இந்திய மற்றும் இந்திய அணி வீரர்கள் படைத்த புது சாதனைகள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த வரிசையில் தற்போது ஜஸ்பிரித் பும்ரா படைத்த புது சாதனை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. 

அதன்படி, டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர்களில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்களின் டாப் 5 பட்டியலில் ஜஸ்பிரித் பும்ரா இடம்பெற்றுள்ளார். இதுவரை தான் விளையாடிய டி20 உலகக் கிண்ண தொடர்களில் ஜஸ்பிரித் பும்ரா 40 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 

இதன் மூலம், அவர் டி20 உலகக் கிண்ண தொடர்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் 5 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 

டி20 உலகக் கிண்ண தொடர்களில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் பங்களாதேஷ் அணியை சேர்ந்த ஷதகிப் அல் ஹாசன் முதலிடத்தில் உள்ளார். இவர் இதுவரை 50 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இவரைத் தொடர்ந்து அவுஸ்திரேலியா அணியை சேர்ந்த ஆடம் ஜாம்பா 44 விக்கெட்டுகளை கைப்பற்றி இரண்டாவது இடத்தில் உள்ளார். மூன்றாவது இடத்தில் இங்கிலாந்து அணி வீரர் ஆதில் ரஷித் உள்ளார். 

இவர்களைத் தொடர்ந்து 43 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஆப்கானிஸ்தான் அணி வீரர் ரஷித் கான் நான்காவது இடத்திலும், இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா 40 விக்கெட்டுகளை கைப்பற்றி ஐந்தாவது இடத்தில் உள்ளார். இதேபோல் இலங்கை வீரர் வனிந்து ஹசரங்காவும் 40 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara