Header Logo

விளையாட்டு
இந்த ஒரு வீரருக்கே அதிக பரிசுத் தொகை!

Mar 10, 2026 - 04:17 PM -

0

இந்த ஒரு வீரருக்கே அதிக பரிசுத் தொகை!

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை 96 ஓட்டங்களில் வீழ்த்தி கிண்ணத்தை வென்ற இந்திய அணி. இதன் மூலம் 3 ஆவது முறை சாம்பியன் பட்டம் வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது. மேலும், நடப்பு சாம்பியனாக இருக்கும் அணி மீண்டும் கிண்ணத்தை வெல்வது இதுவே முதன்முறை. அதேபோல சொந்த நாட்டில் கிண்ணத்தை வெல்லும் முதல் அணி என 3 வரலாற்று சாதனைகளை படைத்தது. 

இந்நிலையில் டி20 உலகக்கிண்ணத்தை வென்ற இந்திய அணிக்கு 131 கோடி ரூபா (இந்திய மதிப்பில்) பரிசுத் தொகை வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், பிற பணியாளர்களுக்கு 131 கோடி ரூபா பகிர்ந்தளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த தொகை வீரர்களுக்கு எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படும் என்கிற தகவல் இல்லை. எனினும், இந்த பரிசு மூலம் எந்த வீரர் யார் அதிக பலன் பெறுவார்கள் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. 

அது வேறு யாருமில்லை சஞ்சு சாம்சன் தான். டி20 உலகக் கிண்ணத் தொடரின் தொடக்கத்தில் சஞ்சு சாம்சன் இப்படி யாராவது கூறியிருந்தால், நிச்சயம் அதற்கு வாய்ப்பில்லை என்றுதான் பலரும் கூறியிருப்பார்கள். குரூப் சுற்றில் நமீபியாவுக்கு எதிரான போட்டியில் உடல்நலக்குறைவு காரணமாக அபிஷேக் சர்மா விளையாடுவது சந்தேகமான நிலையில், அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் களம் இறக்கப்பட்டார். 

குரூப் சுற்றில் கடைசி இரண்டு போட்டிகளில் விளையாடிய சஞ்சு சாம்சன், விரைவாக ஆட்டமிழந்தாலும் அதிரடியான தொடக்கத்தை அளித்தார். எனினும், சூப்பர்-8 சுற்றில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்ததால், வேறு வழியின்றி சஞ்சு சாம்சன் அணிக்குள் வரவழைக்கப்பட்டார். 

மேற்கிந்திய தீவுகள் அணியுடனான வாழ்வா... சாவா... போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன், தனி ஆளாக 97 ஓட்டங்களை குவித்து இந்திய அணியை அரையிறுதிக்கு அழைத்து சென்றார். அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டியில் அடுத்தடுத்து ஹாட்ரிக் அரை சதம் விளாசிய சஞ்சு சாம்சன், இந்திய அணி கிண்ணத்தை வெல்ல காரண கர்த்தாவாக மாறியுள்ளார். சஞ்சு ஐந்து போட்டிகளில் மொத்தம் 321 ஓட்டங்களை எடுக்க, தொடர் நாயகன் விருது அவர் வசம் ஆனது.​ை 

இந்த தொடர் நாயகன் விருது தான் இந்திய அணியில் மற்ற வீரர்களை விட சஞ்சு அதிக பரிசுத் தொகை பெற காரணமாக அமைந்தது. தொடர் நாயகன் விருது பெற்ற சஞ்சுவுக்கு அதனுடன் சுமார் 25 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ. 22 லட்சம். இதனுடன் பிசிசிஐ வழங்கிய பரிசுத் தொகையும் பகிர்ந்தளிக்கப்படும் பட்சத்தில் சஞ்சு மற்ற அனைவரையும் விட மிக அதிக பணத்தைப் பெறுவார்.


MOST READ

காணொளி
மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

title