Header Logo

செய்திகள்
சிங்கக் கொடிக்குப் பதில் கறுப்புக் கொடி: குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணை

Mar 10, 2026 - 09:02 PM -

0

சிங்கக் கொடிக்குப் பதில் கறுப்புக் கொடி: குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணை

இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4ஆம் திகதி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்டிருந்த சிங்கக் கொடியை இறக்கி, அதற்குப் பதிலாகக் கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் மற்றும் பல்கலைக்கழகப் பதிவாளர் ஆகியோர் இன்று குற்றத்தடுப்பு பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பில் இருந்து விடுக்கப்பட்ட விசேட உத்தரவின் பேரில், யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவின் குற்றத்தடுப்புப் பணியக அதிகாரிகளே இந்த விசாரணையை முன்னெடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 3 மணித்தியாலங்கள் முன்னெடுக்கப்பட்ட இந்த விசாரணையின் போது, துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகிய இருவரிடமிருந்தும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

பல்கலைக்கழகத்தால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்ட அறிக்கைகள், ஆதாரங்கள் மற்றும் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையிலேயே இந்த விசாரணை இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது.

பொலிஸ் குற்றத்தடுப்புப் பணியகத்தின் வாகனம் பல்கலைக்கழக பிரதான வளாகத்திற்குள் நுழைந்து, பதிவாளர் அலுவலகத்தில் நீண்ட நேரம் வாக்குமூலங்களைப் பதிவு செய்தமை மாணவர்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் மற்றும் தமது அலைபேசிகளில் காணொளிப் பதிவு செய்த பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மாணவர்களிடமும் இன்று வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

--

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title