Header Logo
Mogo Academy

விளையாட்டு
ஐபிஎல் 2026 தொடரின் முதற்கட்ட போட்டி அட்டவணை வெளியீடு!

Mar 11, 2026 - 07:28 PM -

0

ஐபிஎல் 2026 தொடரின் முதற்கட்ட போட்டி அட்டவணை வெளியீடு!
Mobitel inner

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை முதல் கட்டமாக வெளியிடப்பட்டுள்ளது. 

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இதுவரை 18 சீசன்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், 19 ஆவது சீசன் இந்த மாதம் 28 ஆம் திகதி தொடங்குகிறது. 

கடந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியை இறுதிப் போட்டியில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதன் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. அதன்பின்னர் நடந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக வழக்கு நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் போட்டிக்கான முதல்கட்ட மேட்ச் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 

முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி வரும் 28 ஆம் திகதி பெங்களூருவில் இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகிறது. 

இந்தியாவின் தமிழ்நாடு, அசாம், கேரளா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளதால் அவற்றை கவனத்தில் கொண்டு அடுத்த கட்டமாக போட்டி அட்டவணைகள் வெளியிடப்படவுள்ளன. 

கடந்த சீசனில் மொத்தம் 74 போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில் நடப்பு சீசனில் கூடுதலாக 10 போட்டிகள் என மொத்தம் 84 போட்டிகள் நடத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
 


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara