Header Logo
Mogo Academy

விளையாட்டு
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு பின்னடைவு!

Mar 13, 2026 - 12:05 PM -

0

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு பின்னடைவு!
Mobitel inner

ஐபிஎல் தொடரின் 19 ஆவது சீசன் இந்த மாத இறுதியில் தொடங்க உள்ளது. இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆர்சிபி அணியும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோத உள்ளது. 

இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த அணியின் முன்னனி வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட், காயத்திலிருந்து இன்னும் முழுமையாக மீளாததால் தொடரின் ஆரம்பப் போட்டிகளில் விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது. 

காயம் காரணமாக அவர் சமீபத்தில் நடந்த ஆஷஸ் தொடர் மற்றும் டி20 உலகக் கிண்ண தொடரிலும் பங்கேற்கவில்லை. அவர் தற்போது அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் வைத்தியக் குழுவின் கண்காணிப்பில் உள்ளார். வைத்தியக் குழுவிடமிருந்து 'பிட்னஸ் சான்றிதழ்' கிடைத்தால் மட்டுமே அவர் இந்தியாவுக்குப் பயணம் செய்ய முடியும். 

கடந்த 2025 ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணி கிண்ணத்தை வெல்ல ஹேசில்வுட் மிக முக்கியக் காரணமாக இருந்தார். அந்த சீசனில் 12 போட்டிகளில் விளையாடி 22 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவர் இல்லாத பட்சத்தில் ஆர்சிபி அணியின் வேகப்பந்து வீச்சுத் துறை பலவீனமடைய வாய்ப்புள்ளது. 

இதேபோல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைவர் பேட் கம்மின்ஸும் காயத்தால் அவதிப்பட்டு வருவதால், அவரும் வைத்திய அனுமதியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara