Mar 13, 2026 - 12:40 PM -
0
செலிங்கோ லைஃப் நிறுவனமானது, இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறையில் தொடர்ந்து 22வது ஆண்டாக சந்தை தலைமைத்துவத்தைப் பதிவு செய்துள்ளது. 2025 டிசம்பர் 31ஆம் திகதியுடன் முடிவடைந்த ஆண்டு காலப்பகுதியில் ரூ. 44.18 பில்லியன் மொத்த எழுதப்பட்ட கட்டுப்பண வருமானத்தைப் பதிவு செய்து, 18.96 சதவீத வலுவான வளர்ச்சியை அடைந்துள்ளது.
இந்த நிறுவனமானது, 12 மாதங்களுக்கு ரூ. 72.43 பில்லியன் ஒருங்கிணைந்த வருமானத்தை அறிவித்துள்ளது. இது 10.51 சதவீத உயர்வாகும். மேலும், முதலீடு மற்றும் பிற வருமானங்களாக ரூ. 28.25 பில்லியன் பெற்ற நிலையில் அது மொத்த வருமான உயர்வுக்கு பங்களித்துள்ளது.
செலிங்கோ லைஃப் நிறுவனமானது, 2025 டிசம்பர் 31ஆம் திகதி முடிவடைந்த ஆண்டுப்பகுதியில் தனது ஆயுள் நிதியின் பெறுமதியை 11.56 சதவீதத்தால் உயர்த்தி, ரூ. 200 பில்லியன் என்ற முக்கிய இலக்கைக் கடந்து, ரூ. 201.81 பில்லியனை பதிவு செய்துள்ளது. மேலும், நிறுவனத்தின் நிதி வலிமை மற்றும் நிலைத்தன்மையை வலியுறுத்தும் வகையில், அதன் முதலீட்டு பிரிவினை 13.9 சதவீதத்தால் அதிகரித்து ரூ. 253.43 பில்லியனை பதிவு செய்துள்ளது.
இலங்கையில் மிகப்பெரிய ஆயுள் காப்புறுதி நிறுவனம்என்ற எமது நிலைப்பாட்டைத் தொடர்ந்து தக்க வைத்திருப்பதில் நாம் பெருமை கொள்கிறோம். இது எமது வாடிக்கையாளர்களின் தொடர்ச்சியான நம்பிக்கையையும் விசுவாசத்தையும் பிரதிபலிக்கிறது, என்று செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் நிறைவேற்றுத்தலைவர் திரு. ஆர். ரெங்கநாதன் தெரிவித்தார். எங்கள் முதன்மைநோக்கம் ஏமாற்று வேலைகள் இல்லாத ஆயுள் காப்புறுதித் தயாரிப்புகள் மூலம், எமது காப்புறுதிதரர்களின் வாழ்க்கையில் உள்ள ஆபத்துகளைக் குறைப்பதும் மற்றும் அவர்களின் மாறிவரும் தேவைகளைப் புரிந்துகொண்டு செயல்படும் எமது அணுகுமுறை ஆகியவை, எமது வெற்றியின் முக்கிய அடித்தளங்களாகத் திகழ்கின்றன.இதற்கு புத்திசாலித்தனமான மற்றும் முன்னோக்கிய பார்வையுடைய முதலீட்டு முகாமைத்துவம் வலுவான ஆதரவாக இருந்து, தோற்கடிக்க முடியாத ஒரு இணைப்பை உருவாக்குகிறது.
செலிங்கோ லைஃப் நிறுவனமானது 2025ஆம் ஆண்டில் காப்புறுதிதாரர்களுக்கு ரூ. 31.07 பில்லியன் நிகரக் கோரிக்கைகள் மற்றும் நலன்களை வழங்கியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட ரூ. 6 பில்லியன் அல்லது 24 சதவீத அதிகரிப்பாகும். மேலும், நிறுவனமானது தனது ஆயுள் நிதியத்திற்கு ரூ. 20.68 பில்லியனை பரிவர்த்தனை செய்துள்ளது. மேலும் நிறுவனத்தின் மொத்த சொத்துகள் ஆண்டு முழுவதும் மாதத்திற்கு சராசரியாக ரூ. 2.9 பில்லியனை விட அதிகமாக உயர்ந்து, ரூ. 35.58 பில்லியன் அல்லது 14.15 சதவீதம் அதிகரித்து, 2025ஆம் ஆண்டின் இறுதியில் ரூ. 287.02 பில்லியனை பதிவு செய்துள்ளது.
மேலும், 12 மாதங்களுக்கான லாபமாக ரூ. 3.5 பில்லியனை பங்குதாரர்களின் நிதிக்கு நிறுவனம் பரிவர்த்தனை செய்துள்ளது. இதன் விளைவாக, ஆண்டின் இறுதியில் பங்குதாரர்களின் மூலதன பெறுமதி ரூ. 67.8 பில்லியனாக உயர்ந்துள்ளது.
இந்த நிறுவனம் ஆண்டிற்கான வரிக்கு முந்தைய லாபமாக ரூ. 11.21 பில்லியனை பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இது 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 11.5 சதவீத அதிகரிப்பைக் காட்டுகிறது. வரிக்குப் பிந்தைய நிகர லாபம் ரூ. 7.85 பில்லியனாக பதிவாகி, 10.97 சதவீத முன்னேற்றத்தை வெளிப்படுத்துகிறது.
2025 ஆம் ஆண்டில் தொடர்ந்து 12 வது ஆண்டாக வேர்ல்ட் ஃபைனான்ஸால் இலங்கையின் சிறந்த ஆயுள் காப்பீட்டாளராக அங்கீகரிக்கப்பட்ட செலிங்கோ லைஃப் காப்புறுதி பெற்றவர்களின் இலக்குகள் மற்றும் கனவுகளை பாதுகாக்கவும், அபாயங்களை குறைக்க உதவும் புத்தாக்கமான காப்புறுதித் தீர்வுகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது. 2025 ஆம் ஆண்டில், Brand Finance அமைப்பின் மதிப்பீட்டின்படி,செலிங்கோ லைஃப் நிறுவனம் இலங்கையின் மிக உயர்ந்த மதிப்புள்ள காப்புறுதி வர்த்தகநாமமாகவும், 22-வது மிக பெறுமதி வாய்ந்த வர்த்தகநாமமாகவும் தரவரிசைப்படுத்தப்பட்டது. அதே ஆண்டில், தொடர்ந்து 19-வது தடவையாக ஆண்டின் மக்களுக்கான ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநர் (“People’s Life Insurance Service Provider of the Year”) விருதைப் பெற்றதன் மூலம், மில்லியன் கணக்கான மக்களின் நம்பிக்கைக்குரியவர்த்தகநாமம் என்ற தனது நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியது.மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு முறை இலங்கையின் ஆண்டுக்கான வர்த்தகநாமம் என்ற விருதினை பெற்றுள்ள இந்த நிறுவனம், இலங்கை சர்வதேச வர்த்தக சம்மேளனம் (ICCSL) மற்றும் முகாமைத்துவ கணக்காளர்களுக்கான பட்டய நிறுவனம் (CIMA) ஆகிய அமைப்புகளால் இலங்கையின் மிகவும் பாராட்டப்பட்ட 10 நிறுவனங்களில் ஒன்றாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
