Mar 13, 2026 - 12:59 PM -
0
புனித பரிதோமா கனிஷ்ட பாடசாலையின் டிக்கிரி மாணவர் சேமிப்பு மையத்தை செலான் வங்கி அண்மையில் இடம்பெற்ற தரம் 1இற்கான புதிய மாணவர்களின் சேர்க்கையோடு மீண்டும் புதுப்பித்தது. அதே நாள், பெற்றோர்கள் தங்கள் சிறுவர்களின் எதிர்காலத்திற்கான முக்கிய முதல் படியாக செலான் டிக்கிரி கணக்குகளை ஆரம்பித்தனர். இது மாணவர்களுக்கு சிறு வயதிலிருந்தே சேமிப்பின் மதிப்பையும் புத்திசாலித்தனமான பண முகாமைத்துவத்தையும் கற்றுக்கொள்ள உதவும்.
இந்நிகழ்வில் பெருநகர பிராந்திய முகாமையாளர் தர்ஷி கலுஆராச்சி, சந்தைப்படுத்தல் பிரதம முகாமையாளர் நளின் கருணாரத்ன, புனித பரிதோமா கனிஷ்ட பாடசாலையின் தலைமை ஆசிரியர் Rev. நிஹால் பெர்னாண்டோ, பொறுப்பு சேவை பிரிவுத் தலைவர் சிந்தக பெர்னாண்டோ, மிலேனியம் கிளையின் கிளை முகாமையாளர் இரோஷா டயஸ் உள்ளிட்ட செலான் வங்கியின் சிரேஷ்ட நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர். சிறுவர்களின் பிரகாசமான எதிர்காலத்திற்காக, சிறு வயதிலிருந்தே நிதி ஒழுக்கத்தை வளர்க்க செலான் டிக்கிரி துணை நிற்கிறது.
