Header Logo
Mogo Academy

விளையாட்டு
உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் ஈரான் விலக முடிவு?

Mar 13, 2026 - 01:59 PM -

0

உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் ஈரான் விலக முடிவு?
Mobitel inner

23 ஆவது உலகக் கிண்ண கால்பந்து போட்டி ஜூன், ஜூலை மாதங்களில் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் நடக்கிறது. 

இதில் கலந்து கொள்ளும் 48 அணிகளில் ஒன்றான ஈரான் 'ஜி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. 1 பெல்ஜியம், எகிப்து, நியூசிலாந்து ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும். 

'ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. எங்களது உச்ச தலைவரை கொன்று இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் அங்கு நடக்கும் உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் பங்கேற்க சாத்தியமில்லை' என்று ஈரான் விளையாட்டுத்துறை அமைச்சர் அகமத் டோன்யமாலி அறிவித்தார். 

ஆனாலும் அவர்களை சமாதானப்படுத்தி போட்டியில் பங்கேற்க வைக்க முடியும் என சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) நம்புகிறது. 

ஈரான் இந்த போட்டியை புறக்கணித்தால் உலகக் கிண்ண கால்பந்தில் 1950 ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் புறக்கணிப்பாக இருக்கும். 

கடைசியாக 1950 ஆம் ஆண்டு பிரேசிலில் நடந்த உலகக் கிண்ண போட்டியில் ஆடும் வாய்ப்பை பெற்ற இந்தியா, பிரான்ஸ் போன்ற அணிகள் நிதி நெருக்கடி காரணமாக விலகி இருந்தன. 

ஈரான் விலகினால் அந்த அணிக்கு பதிலாக யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. 'பிபா' தகுதி சுற்று விதிமுறைப்படி. ஆசிய மண்டலத்தில் அடுத்த சிறந்த தரவரிசை கொண்ட அணிக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். இதன்படி ஈராக் அணி தேர்வாகும். 

ஆனால் ஈராக் அணி 'பிளே-ஆப்' சுற்றில் விளையாட உள்ளது. இதில் வெற்றி பெற்றால் அந்த அணி நேரடியாக உலகக் கிண்ண போட்டிக்கு தகுதி பெற்று விடும். அப்படி ஒரு சூழல் உருவானால் அதற்கு அடுத்த இடத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வாய்ப்பு கிடைக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara