Header Logo

விளையாட்டு
நியூசிலாந்தில் வரலாறு படைக்கப்போகும் தென் ஆப்பிரிக்கா!

Mar 14, 2026 - 04:17 PM -

0

நியூசிலாந்தில் வரலாறு படைக்கப்போகும் தென் ஆப்பிரிக்கா!

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாக, தென் ஆப்பிரிக்காவின் ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணிகள் ஒரே நேரத்தில் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளன. இந்தத் தொடர் நாளை (15) தவுரங்காவில் உள்ள பே ஓவல் மைதானத்தில் பிரம்மாண்டமாக தொடங்குகிறது. 

ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரின் அனைத்துப் போட்டிகளிலும், ஒரே மைதானத்தில் மதிய வேளையில் பெண்கள் அணியும், இரவு வேளையில் ஆண்கள் அணியும் விளையாட உள்ளன. 

நாளை தவுரங்காவில் முதல் போட்டி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து ஹாமில்டன் 17 ஆம் திகதி, ஆக்லாந்தில் 20 ஆம் திகதி, வெலிங்டனில் 22 ஆம் திகதி மற்றும் கிறிஸ்ட்சர்ச் 25 ஆம் திகதி ஆகிய நகரங்களில் அடுத்தடுத்த போட்டிகள் நடைபெறவுள்ளன. 

தென் ஆப்பிரிக்க ஆண்கள் அணிக்கு கேசவ் மகாராஜ் தலைமை தாங்குகிறார். பெண்கள் அணிக்கு நட்சத்திர வீராங்கனை லாரா வோல்வார்ட் தலைமை தாங்குகிறார். 

நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய இரு நாடுகளுமே தங்களது ஆண்கள் மற்றும் பெண்கள் தேசிய அணிகளை ஒரே சுற்றுப்பயணத்தில் முழுமையாகக் களமிறக்குவது இதுவே முதல் முறை. குறிப்பாக, 2026 ஜூன் மாதம் நடைபெறவுள்ள பெண்கள் டி20 உலகக் கிண்ணத்திற்கு தயாராக தென் ஆப்பிரிக்கப் பெண்கள் அணிக்கு இந்தத் தொடர் மிக முக்கியமானது. 

டி20 தொடர் முடிந்த பிறகு, மார்ச் 29 முதல் ஏப்ரல் 4 வரை மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்கப் பெண்கள் அணி மட்டும் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

title