Header Logo

வணிகம்
செலான் வங்கி, DIMO உடனான கூட்டாண்மையில் வணிக மற்றும் பயணிகள் வாகனங்களுக்கு விரைவான லீசிங் தீர்வுகளை வழங்குகிறது

Mar 17, 2026 - 02:56 PM -

0

செலான் வங்கி, DIMO உடனான கூட்டாண்மையில் வணிக மற்றும் பயணிகள் வாகனங்களுக்கு விரைவான லீசிங் தீர்வுகளை வழங்குகிறது

செலான் வங்கி பிஎல்சி, 85 ஆண்டுகளாக வாகனச் சந்தையில் சிறந்து விளங்கும் DIMOவுடன் மூலோபாய கூட்டாண்மையில் இணைந்துள்ளது. இதனூடாக DIMOவிடமிருந்து Tata வணிக வாகனங்களை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேக லீசிங் வசதியை அறிமுகப்படுத்துகின்றது. 

இவ் இணைவு, நம்பகமான போக்குவரத்து தீர்வுகளைத் தேடும் தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கு அதிக வசதி, போட்டித்தன்மை வாய்ந்த நிதி தெரிவுகள் மற்றும் விரைவான ஒப்புதல்களை வழங்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதார மீட்சிக்கும் விரிவடைந்து வரும் போக்குவரத்து தேவைகளுக்கும் வணிக வாகனங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. அதனை உணர்ந்து, அதற்கான நிதி அணுகலை விரிவுபடுத்தும் செலான் வங்கியின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்த முயற்சி பிரதிபலிக்கிறது. 

தகுதியுள்ள வாடிக்கையாளர்கள் 24 மணி நேரத்திற்குள் விரைவான ஒப்புதல்களைப் பெற்று DIMOவின் பரந்த அளவிலான வணிக வாகனங்களை விரைவாக அணுக முடியும். செலான் வங்கி மற்றும் DIMO கூட்டாக லீசிங் செயலாக்க கட்டணங்களில் 50% சலுகையையும் தேர்ந்தெடுக்கப்பட்ட வாகனங்களுக்கு காப்பீட்டு சலுகையையும் வழங்குகின்றன. 

மேலும் வங்கி, போட்டித்தன்மையான வட்டி வீதங்களையும் வழங்குகிறது. அத்துடன் செலான் வங்கியின் அர்ப்பணிப்புள்ள லீசிங் நிபுணர்கள், விண்ணப்ப செயல்முறை முழுவதும் இருக்கும் இடத்திற்கே வந்து இலவச ஆலோசனைகளையும் சேவைகளையும் வழங்க தயாராக உள்ளனர். நாடளாவிய கிளை வலையமைப்புடன் செலான் வங்கி ஆவணப்படுத்தல், ஒப்புதல்கள் மற்றும் லீசிங்குக்கு பின்னரான சேவைகள் ஆகியவற்றில் தடையற்ற வழிகாட்டுதலை உறுதி செய்கிறது. 

இந்த இணைவு குறித்து செலான் வங்கியின் தனிநபர் வங்கிப் பிரிவின் பிரதிப் பொது முகாமையாளர் யூஜின் செனவிரத்ன கூறுகையில், “இந்த முயற்சி, வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட நிதித் தீர்வுகளை வழங்குவதில் வங்கியின் அர்ப்பணிப்பை வெளிக்காட்டும் அதே நேரத்தில் தொழில்முனைவோர் மற்றும் வணிகங்களுக்கு நம்பகமான வாகன உரிமை வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் அவர்களின் வளர்ச்சியை ஆதரிக்கிறது.” என்றார். 

DIMOவின் வணிக வாகன விற்பனைப் பிரிவின் பிரதிப் பொது முகாமையாளர் சம்பத் குமாரசிங்க கூறுகையில், “எங்கள் ஒத்துழைப்பு ஊடாக சிறிய அளவிலிருந்து பெரிய அளவிலான வணிகச் செயற்பாடுகள் வரை தேவையான Tataவின் பரந்த வணிக வாகனங்களை தெரிவுசெய்யும் வாய்ப்பு கிடைக்கிறது. நாடெங்கிலும் கிடைக்கும் DIMOவின் வலுவான விற்பனைக்குப் பின்னரான ஆதரவு வலையமைப்பு, இன்றைய மாறும் சந்தையில் வாடிக்கையாளர்கள் அதிக செயல்திறன் மற்றும் போட்டித்தன்மையுடன் செயல்பட உதவுகிறது.” என்றார். இந்த கூட்டாண்மை இரு நிறுவனங்களுக்கும் முக்கிய மைல்கல்லை குறிக்கிறது. வாகனத் துறையில் DIMOஇன் தலைமைத்துவதுடன் செலான் வங்கியின் நிதி நிபுணத்துவமும் இணைந்து நாடெங்கிலும் அணுகக்கூடிய லீசிங் திட்டங்கள் மூலம் வாகனங்களை சொந்தமாக்கும் வாய்ப்புகளை தனிப்பயனாக்கப்பட்ட சேவை ஊடாக வழங்குகிறது. 

லீசிங் வசதியைப் பற்றி மேலும் அறிய ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் செலான் வங்கியின் விசேட தொலைபேசி இலக்கமான 011 200 88 88 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Comments
0

MOST READ

காணொளி
நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

title