Mar 17, 2026 - 03:01 PM -
0
வேகம், உறுதித்தன்மை மற்றும் எல்லையற்ற சாத்தியக்கூறுகளுடன் கூடிய டிஜிட்டல் மயமான எதிர்காலத்தை நோக்கி வாடிக்கையாளர்கள் நம்பிக்கையுடன் அடியெடுத்து வைக்கும் வகையில், SLT- MOBITEL மீளவடிவமைக்கப்பட்ட புதிய Fibre Unlimited புரோட்பான்ட் பக்கேஜ்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
நாட்டின் தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் தீர்வு வழங்குனரான SLT-MOBITEL, இல்லங்களின் மாறிவரும் டிஜிட்டல் வாழ்க்கை முறை மற்றும் வர்த்தகங்களின் வளர்ந்து வரும் இணைப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் புத்துயிர் அளிக்கப்பட்ட புதிய Unlimited பக்கேஜ்களை அறிமுகப்படுத்தியுள்ளது. உலகத்தரம் வாய்ந்த Fibre உட்கட்டமைப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இப்பக்கேஜ்கள், அதிவேகமான இணையம், Low Latency, இணையற்ற நிலைத்தன்மை மற்றும் எவ்வித இடையூறுமற்ற வரம்பற்ற அணுகலை வழங்குகின்றன. இதன் மூலம், வரிகள் நீங்கலாக 5,900 ரூபாய் முதல் ஆரம்பமாகும் இலங்கையின் மிகவும் சக்திவாய்ந்த நிலையான புரோட்பான்ட் அன்லிமிடட் சேவை வழங்குனராக SLT-MOBITEL Fibre தன்னை நிலைநிறுத்தியுள்ளது.
டிஜிட்டல் அனுபவங்கள் முன்னேற்றத்தைத் தீர்மானிக்கும் உலகிற்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மேம்படுத்தப்பட்ட Fibre பக்கேஜ்கள், 100 Mbps முதல் 1000 Mbps வரையிலான அதிவேக இணைய வசதியை வழங்குகின்றன. இது தடையற்ற Streaming, கேமிங், வீட்டிலிருந்தே பணியாற்றுதல், இணையவழி கற்றல் மற்றும் நிறுவனச் செயல்பாடுகளை முழுமையான நம்பகத்தன்மையுடன் மேற்கொள்ள வழிவகுக்கின்றது.
வெவ்வேறு பயனர்களின் தேவைகள் மற்றும் தமது வரவுசெலவுகளுக்கு ஏற்ப இந்த Unlimited Fibre பக்கேஜ்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. சிறிய குடும்பங்களுக்கான Home பக்கேஜ் மாதம் 5,900 ரூபாயிலிருந்தும், Home Plus பக்கேஜ் 9,900 ரூபாயிற்கும் வழங்கப்படுகின்றன. Streamers மற்றும் ஆரம்பநிலை வணிகங்களுக்காக Twin பக்கேஜ் 14,900 ரூபாயிற்கும், கேமர்கள் மற்றும் பெரிய குடும்பங்களுக்காக Pro பக்கேஜ் 19,900 ரூபாயிற்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நவீன தொழில்நுட்ப ஆர்வமுள்ள குடும்பங்கள் மற்றும் சிறு வணிகங்களுக்காக Edge பக்கேஜ் 29,900 ரூபாயிற்கும், அதிதீவிர பயனர்கள் மற்றும் பாரிய நிறுவனங்களுக்காக Turbo பக்கேஜ் 39,900 ரூபாயிற்கும் கிடைக்கின்றன. இவற்றுடன், ஆரம்பநிலை பயனர்களுக்காக 80 GB தரவு வசதியைக் கொண்ட Fibre Starter எனும் Anytime திட்டம் மாதம் 2,690 ரூபாய் முதல் வழங்கப்படுவதுடன், இது அனைத்துத் தரப்பினருக்குமான இணைய வசதியை உறுதிசெய்கின்றது.
முக்கியமாக, அனைத்துப் பக்கேஜ்களுக்கும் தொலைபேசி இணைப்புக்கான மாதாந்த வாடகை அறவிடப்படமாட்டாது என்பதுடன், இது வாடிக்கையாளர்களுக்கு மேலதிக நன்மைகளை உறுதி செய்கின்றது. அத்துடன், ஆரம்பநிலைத் தெரிவாக Fibre Starter எனும் Anytime திட்டம் மாதம் 2,690 ரூபாவிற்கு 80 GB தரவு வசதியுடன் வழங்கப்படுகின்றது. இத்திட்டத்தில் வாடிக்கையாளரின் வேண்டுகோளுக்கு இணங்க, Pay-as-you-use வசதியான முறையில் தொலைபேசி அழைப்பு வசதியை பெற்றுக்கொள்ளும் நெகிழ்வுத்தன்மையும் வழங்கப்பட்டுள்ளது. இது அனைத்துத் தரப்பினரும் இணைய வசதியை இலகுவாகப் பெற்றுக்கொள்வதை உறுதி செய்கின்றது.
எதிர்காலத் தேவைகளை கவனத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தீர்வுகள், வாடிக்கையாளர்கள் தங்களது பயன்பாட்டு முறைக்கேற்ப பொதிகளைத் தெரிவு செய்யும் சுதந்திரத்தை வழங்குகின்றன. இது ஒட்டுமொத்த புரோட்பான்ட் செலவுகளைக் குறைப்பதுடன், உண்மையான அன்லிமிடட் இணைய அனுபவத்தை வழங்குகின்றது. அத்துடன், தனிப்பட்ட இலக்குகள் மற்றும் தொழில்முறை வளர்ச்சியை மேம்படுத்தும் வகையிலான உயர்தரமான மற்றும் உறுதிமிக்க இணைய வசதியையும் வாடிக்கையாளர்கள் இதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.
இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாட்டின் டிஜிட்டல் செயற்படுத்தப்பட்ட புத்தாக்கம், சமூகங்களுக்கிடையிலான இடைவெளியை சீர் செய்தல் மற்றும் நவீன வாழ்க்கை முறைகளுக்கு பொருத்தமான இணைப்புத்திறனை வழங்குதல் ஆகியவற்றில் நாட்டின் முன்னோடியாக SLT-MOBITEL தன்னை தொடர்ந்தும் நிலைநிறுத்தியுள்ளது. இந்த மீள் வடிவமைக்கப்பட்ட Fibre பக்கேஜ்களின் அறிமுகத்துடன், வாடிக்கையாளர்களின் வாழ்வை மேம்படுத்தல் மற்றும் இலங்கையின் நம்பிக்கையை வென்ற மற்றும் உறுதியான புரோட்பான்ட் சேவை வழங்குனர் எனும் தனது அர்ப்பணிப்பை SLT-MOBITEL உறுதி செய்துள்ளது.
