Header Logo
Mogo Academy

விளையாட்டு
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக தோனி!

Mar 17, 2026 - 04:44 PM -

0

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக தோனி!
Mobitel inner

கவுதம் கம்பீர் - தோனி இடையேயான மோதல் இந்திய கிரிக்கெட்டில் அனைவருக்கும் தெரிந்தது. 2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டி தான் இந்த மோதலுக்கு தொடக்கப்புள்ளி. அந்தப் போட்டியில் கம்பீர் 97 ஓட்டங்கள் எடுத்தார். ஆனால், தோனி 91* ஓட்டங்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார். கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து தோனி வெற்றிபெற வைக்க தோனியை ரசிகர்கள் கொண்டாட தொடங்கினர். 

இப்படி தோனியை மட்டும் கொண்டாடி மற்ற வீரர்களின் பங்களிப்பு மறைக்கப்படுவதாக கம்பீர் அவ்வப்போது தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். "தோனியின் அந்த கடைசி சிக்ஸர் மட்டும் உலகக் கிண்ணத்தை வென்று தரவில்லை. ஒட்டுமொத்த அணியின் உழைப்புதான் வென்றது" என்பது கம்பீரின் வாதம். 

பல முறை தோனி குறித்து கம்பீர் பேசியது விவாதங்களுக்குள்ளாகி இருக்கிறது. ஆனால் தனக்கு தோனி மீது தனிப்பட்ட வெறுப்பு எதுவும் இல்லை என்றும் அவர் ஒரு சிறந்த அணி தலைவர், ஆனால், தனிநபர் வழிபாட்டை விட அணிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதே தனது கருத்து என கம்பீர் விளக்கம் கொடுத்தார். 

இதற்கிடையே, சமீபத்திய டி20 உலகக் கிண்ணத்தை இந்திய அணி வென்ற பிறகு வாழ்த்து தெரிவித்த தோனி அதில், "பயிற்சியாளர் சாப் (Coach Sahab), உங்கள் முகத்தில் இருக்கும் புன்னகை மிகவும் அழகாக இருக்கிறது. தீவிரம் மற்றும் புன்னகை ஆகியவற்றின் கலவை ஒரு 'கில்லர் காம்போ'. சிறப்பாகச் செய்தீர்கள், மகிழுங்கள்," என்று கம்பீரை வெகுவாகப் பாராட்டினார். இதற்கு ரீப்ளே செய்துள்ள கவுதம் கம்பீர் சிரிப்பதற்கு இதை விடப் பெரிய காரணம் வேறு என்ன இருக்க முடியும்? உங்களைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி!" என்று கூறினார். 

இந்த நிலையில் தான் தனக்கு பிறகு இந்திய அணிக்கு தோனி பயிற்சியாளராக வரவேண்டும் என கம்பீர் விருப்பம் தெரிவித்திருக்கிறார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய கம்பீர் தனக்குப் பிறகு எம்.எஸ். தோனி ஒருநாள் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார். மேலும், "டி20 உலகக் கிண்ணத்தை வென்றதாக தன்னை வாழ்த்தியது போல், தோனி பயிற்சியாளரான பின் நான் வெளியே இருந்து அவருக்கு அதே போன்றதொரு வாழ்த்துச் செய்தியை எழுத வேண்டும். அப்போது அவர் அந்தப் பயிற்சியாளர் அறையில் இருந்து புன்னகைக்க வேண்டும் என்பதே என் ஆசை" என்றும் கூறியிருக்கிறார். 

கடந்த காலங்களில் தோனி குறித்துப் பலமுறை விமர்சித்து வந்த கம்பீர், தற்போது அவருடன் இணக்கமாக செல்வது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கம்பீர் தெரிவித்துள்ள தோனி பயிற்சியாளர் என்கிற விருப்பம் நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara