Header Logo
Mogo Academy

விளையாட்டு
இனி 7 இல்லை, புது நம்பரை தெரிவு செய்த தோனி!

Mar 17, 2026 - 05:07 PM -

0

இனி 7 இல்லை, புது நம்பரை தெரிவு செய்த தோனி!
Mobitel inner

ஐபிஎல் 2026 சீசன் வரும் 28 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதற்காக அந்தந்த அணி வீரர்கள் போட்டிகளுக்கு தயாராகி வருகிறார். இதில் சிஎஸ்கே அணியும் தங்களின் பயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஐபிஎல் தொடர்பாக சிஎஸ்கே அணியின் வீரர் எம் எஸ் தோனி ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். 

தோனி என்றாலே தல என்றும் நம்பர் 7 ஆம் தான் நினைவுக்கு வரும். ரசிகர்களும் தல ஃபார் எ ரீசன் என்று 7 என்ற எண்ணை பெருமையாக பேசி வந்தனர். தற்போது தோனி வெளியிட்ட வீடியோவில், இனிமேல் 7 கிடையாது, 8 என்று கூறியுள்ளார். 

அந்த வீடியோ பதிவில், சில எண்கள் நம்முடன் அப்படியே தங்கிவிடும். 7 எப்போதும் எனக்கு அப்படிப்பட்ட ஒன்றுதான், ஆனால் இன்று நான் 8க்கு மாறுகிறேன். அதற்கான காரணம் உங்களுக்கு விரைவில் தெரியும் என்று குறிப்பிட்டிருக்கிறார் எம் எஸ் தோனி. 

தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் ஜெர்சி எண் 7-ஐ தோனி மாற்றவில்லை. மாறாக, இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பை கெளரவிக்கும் விதமாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அந்த எண்ணிற்கு ஓய்வு அளித்துள்ளது. 

2023 இல் எம் எஸ் தோனியின் பங்களப்புக்கு மரியாதை செலுத்தும் விதமாகத்தான் பிசிசிஐ 7 எண்ணிற்கு ஓய்வு செய்யமுடிவு செய்தது. ஆனால் தோனி ஐபிஎல் போட்டிகளில் 7 எண் ஜெர்ச்சியைதான் அணிந்து விளையாடினார். இந்த சீசனில் 8ஐ அதற்காக தேர்வு செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara