Header Logo
Mogo Academy

விளையாட்டு
புதிய அணி தலைவரை அறிவித்த SRH!

Mar 18, 2026 - 07:10 PM -

0

புதிய அணி தலைவரை அறிவித்த SRH!
Mobitel inner

ஐபிஎல் 2026 தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். அணிகள் அனைத்தும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். 

இந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்வாகம் தனது தலைமைப் பொறுப்பில் முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது. 

ஐதராபாத் அணியின் தலைவராக பேட் கம்மின்ஸ் காயம் காரணமாக தொடக்கப் போட்டிகளில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் சன்ரைசர்ஸ் அணியின் இடைக்கால அணியின் தலைவராக அனுபவமிக்க விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் நியமிக்கப்பட்டுள்ளார். 

இவருக்கு துணையாக, அதிரடி தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா துணை தலைவராக செயல்படுவார் என சன்ரைசர்ஸ் ஐதராபாத் நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

பாட் கம்மின்ஸ் காயத்திலிருந்து மீண்டு வர இன்னும் சில காலம் தேவைப்படுவதால், அவர் குணமடைந்து திரும்பும் வரை இந்த புதிய கூட்டணி அணியை வழிநடத்தும். 

2016 இல் இந்திய 19 வயதுக்குட்பட்டோர் அணியை உலகக் கிண்ண இறுதிப்போட்டி வரை வழிநடத்திய அனுபவம் கொண்டவர் இஷான் கிஷன் என்பது குறிப்பிடத்தக்கது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara