Header Logo
SLIC
உலகம்
மெட்டா நிறுவனத்திற்கு 375 மில்லியன் டொலர் அபராதம்

Mar 25, 2026 - 04:25 PM

 மெட்டா நிறுவனத்திற்கு 375 மில்லியன் டொலர் அபராதம்
Mobitel Inner 1278
EDEX Inner

சிறுவர் பாதுகாப்பு தொடர்பாகப் பயனர்களை தவறாக வழிநடத்தியமைக்காக, Facebook மற்றும் Instagram ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா (Meta) நிறுவனத்திற்கு 375 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்குமாறு அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநில நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான சமூக வலைத்தளங்கள் ஊடாகச் சிறுவர்களை ஆபத்திற்கு உள்ளாக்கியமை, பாலியல் ரீதியான தெளிவான காட்சிகளை அவர்களுக்குக் காண்பித்தமை மற்றும் பாலியல் குற்றவாளிகளுடன் தொடர்புகொள்வதற்கு இடமளித்தமை ஆகியவற்றுக்கு அந்த நிறுவனம் பொறுப்புக்கூற வேண்டும் என நடுவர் மன்றம் (Jury) தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

 

இந்தத் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள நியூ மெக்சிகோவின் தலைமை சட்ட அதிகாரி, இது ஒரு "வரலாற்றுச் சிறப்புமிக்க" வெற்றி என்றும், சிறுவர் பாதுகாப்புப் பிரச்சினைகள் தொடர்பாக ஒரு மாநிலம் மெட்டா நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடந்து வெற்றி பெற்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என்றும் தெரிவித்துள்ளார். 

 

ஏழு வாரங்களாக நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் போது, மெட்டா நிறுவனத்தின் உள்நாட்டு ஆவணங்கள் மற்றும் முன்னாள் ஊழியர்களின் சாட்சியங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. 

 

நிறுவனத்தின் முன்னாள் பொறியியல் பிரிவின் தலைவரான ஆர்டுரோ பெஜார் (Arturo Bejar) சாட்சியமளிக்கையில், வயது குறைந்த பயனர்களுக்குப் பாலியல் உள்ளடக்கங்கள் எவ்வாறு பரிந்துரைக்கப்படுகின்றன என்பதைத் தனது விசாரணைகள் உறுதிப்படுத்தியதாகக் கூறியுள்ளார். 

 

தனது சிறு வயது மகளுக்குக் கூட இன்ஸ்டாகிராம் ஊடாக அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடமிருந்து பாலியல் ரீதியான முன்மொழிவு வந்ததாக அவர் வெளிப்படுத்தியுள்ளார். 

 

உள்நாட்டு ஆய்வுகளின்படி, ஒரு வார காலப்பகுதியில் இன்ஸ்டாகிராம் பயனர்களில் 16 சதவீதமானோர் தமக்குத் தேவையற்ற நிர்வாணக் காட்சிகள் அல்லது பாலியல் செயல்பாடுகள் தொடர்பான காட்சிகள் தோன்றியதாகப் முறைப்பாடு அளித்துள்ளனர். 

 

மார்க் சக்கர்பெர்க்கின் தலைமையிலான மெட்டா நிறுவனம் இந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதில்லை என்றும், இது தொடர்பாக மேன்முறையீடு செய்ய எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது. 

 

"எமது தளங்களில் உள்ள மக்களைப் பாதுகாக்க நாம் கடினமாக உழைக்கிறோம்" என அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

 

கடந்த காலங்களில் சிறுவர்களின் பாதுகாப்பிற்காக 'Teen Accounts' போன்ற புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியதாகவும் அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. 

 

எவ்வாறாயினும், மெட்டா நிறுவனத்தின் 'அல்காரிதம்கள்' ஊடாகச் சிறுவர்கள் பாலியல் காட்சிகள் மற்றும் பாலியல் கடத்தல்காரர்களை நோக்கித் தள்ளப்படுவதாக நியூ மெக்சிகோ மாநிலம் குற்றம் சாட்டியிருந்தது.

 

 நியூ மெக்சிகோவின் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் சட்டத்தை ஆயிரக்கணக்கான முறை மீறியதைக் கருத்திற்கொண்டு, ஒரு மீறலுக்கு அதிகபட்சமாக 5,000 டொலர் வீதம் இந்த 375 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278