Mar 25, 2026 - 05:54 PM -
0
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அனுராதபுரம், மன்னார், வவுனியா மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில இடங்களிலும் வெப்பச் சுட்டெண், அதாவது மனித உடலுக்கு உணரப்படும் வெப்பமானது 'எச்சரிக்கை மட்டம்' வரை அதிகரிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தங்கள் தொடர்பான முன்னெச்சரிக்கை பிரிவினால் நாளைய (26) தினத்திற்காக செல்லுபடியாகும் வகையில், இன்று (25) பிற்பகல் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.


