Header Logo

செய்திகள்
கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் ஹோர்முஸ் நீரிணையை கடந்த சீனக் கப்பல்

Mar 25, 2026 - 07:43 PM -

0

கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் ஹோர்முஸ் நீரிணையை கடந்த சீனக் கப்பல்

ஹோர்முஸ் நீரிணை ஊடாகக் கப்பல்கள் பயணிப்பதற்கு ஈரான் விதித்துள்ள புதிய நிபந்தனைகளுக்கு மத்தியில், இன்று (25) சீனக் கப்பல் ஒன்று அந்தப் பகுதியைக் கடந்துச் சென்றுள்ளது.

இந்த புதிய கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், ஹோர்முஸ் நீரிணை ஊடாக சீனாவின் 'எக்ரெட்' (Egret) என்ற எண்ணெய் தாங்கிக் கப்பல் மாத்திரமே பயணித்துள்ளதாகப் பதிவாகியுள்ளது. இக்கப்பல் வழமையான கடல் வழித்தடத்தை விட ஈரானிய கடற்கரைக்கு மிக நெருக்கமான பகுதியில் பயணித்துள்ளது.

தனக்கு எதிரான போரில் ஈடுபடாத மற்றும் பகைமையற்ற நாடுகளின் கப்பல்கள் மாத்திரமே இந்த கடல் வழித்தடத்தைப் பயன்படுத்த முடியும் என ஈரான் அறிவித்துள்ளது. இருப்பினும், அவ்வாறு பயணிப்பதற்கு ஈரான் அதிகாரிகளுடன் முன்கூட்டியே ஒருங்கிணைப்பு செய்யப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நேற்று முன்தினம் சீனா, இந்தியா மற்றும் பனாமா ஆகிய நாடுகளுக்குச் சொந்தமான 6 கப்பல்கள் இந்த நீர்வழியைக் கடந்துச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Comments
0

MOST READ

காணொளி
இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்!

மஹா கும்பாபிஷேகம்

மஹா கும்பாபிஷேகம்

அம்பாறையில் யானைகளின் அணிவகுப்பு

அம்பாறையில் யானைகளின் அணிவகுப்பு

120 மில்லியன் ரூபா செலவில்  உள்ளக விளையாட்டு அரங்கு!

120 மில்லியன் ரூபா செலவில் உள்ளக விளையாட்டு அரங்கு!

9 வருடங்களைத் தாண்டியும் இடமாற்றங்கள் வழங்கப்படவில்லை!

9 வருடங்களைத் தாண்டியும் இடமாற்றங்கள் வழங்கப்படவில்லை!

ஏறாவூரில் இருவர் மீது சரமாரி வாள்வீச்சு!

ஏறாவூரில் இருவர் மீது சரமாரி வாள்வீச்சு!

வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் அல்ல!

வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் அல்ல!

பணிப்பகிஷ்கரிப்பால் கிழக்கு மாகாணத்தில் கலவையான சூழல்!

பணிப்பகிஷ்கரிப்பால் கிழக்கு மாகாணத்தில் கலவையான சூழல்!

அம்பாறையில் உச்சகட்ட பதற்றம்

அம்பாறையில் உச்சகட்ட பதற்றம்

பிரதேசவாதங்களை தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டு இருக்கிறார்!

பிரதேசவாதங்களை தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டு இருக்கிறார்!

title