Header Logo

செய்திகள்
எரிபொருள் விலை உயர்வால் ரயில் பயணிகள் அதிகரிப்பு

Mar 25, 2026 - 08:01 PM -

0

 எரிபொருள் விலை உயர்வால் ரயில் பயணிகள் அதிகரிப்பு

எரிபொருள் விலை உயர்வு மற்றும் பேருந்து கட்டண அதிகரிப்பு காரணமாக, பொதுமக்கள் அதிகளவில் ரயில்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


அந்தச் சங்கத்தின் பொதுச் செயலாளர் கசுன் சாமர ஜயசேகர இன்று (25) செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தி கருத்து தெரிவிக்கையில், இந்த நிலைமையால் ரயில்வே திணைக்களம் கடந்த சில நாட்களாக இலாபம் ஈட்டி வருவதாகக் குறிப்பிட்டார்.


எரிபொருள் விலை உயர்வால் எதிர்காலத்தில் சரக்கு போக்குவரத்திற்கும் பொதுமக்கள் ரயில்களையே நாடுவார்கள் என்பதால், ரயில் பயண வாரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு அவர் பொறுப்புவாய்ந்த தரப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


கொழும்பு கோட்டைக்கு வரும் மற்றும் அங்கிருந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், பயணிகளின் கேள்வி அதிகரித்துள்ள போதிலும், ரயில் பயண வாரங்கள் குறைக்கப்பட்டுள்ளமையால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டினார்.


அத்துடன், நிலவும் பொருளாதார கஷ்டங்களைக் கருத்திற்கொண்டு ரயில் கட்டணங்களை உயர்த்த வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார். பொதுமக்களுக்கு எஞ்சியுள்ள ஒரேயொரு மலிவான போக்குவரத்து சேவை ரயில்கள் மாத்திரமே என்பதையும் அவர் வலியுறுத்திக் கூறினார்.

Comments
0

MOST READ

காணொளி
இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்!

மஹா கும்பாபிஷேகம்

மஹா கும்பாபிஷேகம்

அம்பாறையில் யானைகளின் அணிவகுப்பு

அம்பாறையில் யானைகளின் அணிவகுப்பு

120 மில்லியன் ரூபா செலவில்  உள்ளக விளையாட்டு அரங்கு!

120 மில்லியன் ரூபா செலவில் உள்ளக விளையாட்டு அரங்கு!

9 வருடங்களைத் தாண்டியும் இடமாற்றங்கள் வழங்கப்படவில்லை!

9 வருடங்களைத் தாண்டியும் இடமாற்றங்கள் வழங்கப்படவில்லை!

ஏறாவூரில் இருவர் மீது சரமாரி வாள்வீச்சு!

ஏறாவூரில் இருவர் மீது சரமாரி வாள்வீச்சு!

வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் அல்ல!

வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் அல்ல!

பணிப்பகிஷ்கரிப்பால் கிழக்கு மாகாணத்தில் கலவையான சூழல்!

பணிப்பகிஷ்கரிப்பால் கிழக்கு மாகாணத்தில் கலவையான சூழல்!

அம்பாறையில் உச்சகட்ட பதற்றம்

அம்பாறையில் உச்சகட்ட பதற்றம்

பிரதேசவாதங்களை தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டு இருக்கிறார்!

பிரதேசவாதங்களை தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டு இருக்கிறார்!

title