Header Logo

செய்திகள்
"குஷ்" போதைப்பொருளுடன் இருவர் கட்டுநாயக்கவில் கைது

Mar 26, 2026 - 10:14 AM -

0

"குஷ்" போதைப்பொருளுடன் இருவர் கட்டுநாயக்கவில் கைது

சுமார் 10 கோடி ரூபாவிற்கும் அதிக சந்தைப் பெறுமதியுடைய "குஷ்" போதைப்பொருள் தொகையை நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற இரு இலங்கை பயணிகள், விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இன்று (26) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் 'பசுமை வழி' ஊடாக இந்தப் போதைப்பொருளை வெளியே எடுத்துச் செல்ல முயன்றபோதே இவர்கள் பிடிபட்டுள்ளனர்.


அவர்கள் கொண்டு வந்த 4 பயணப் பொதிகளில் சூட்சுமமாக அமைக்கப்பட்டிருந்த 12 ​பெக்கெட்டுகளில் அடைக்கப்பட்டிருந்த 10 கிலோ 476 கிராம் எடையுடைய "குஷ்" போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டது.


இதன் மொத்தப் பெறுமதி 10 கோடியே 47 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கைது செய்யப்பட்டவர்கள் பொகவந்தலாவை பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


இவர்களில் 25 வயதுடைய ஒருவர் துணிக்கடை ஊழியர் என்பதும், 26 வயதுடைய மற்றவர் சாரதி என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.


தாய்லாந்தின் பேங்கொக் நகரில் இந்தப் போதைப்பொருளைக் கொள்வனவு செய்த இவர்கள், பின்னர் இந்தியாவின் புதுடெல்லிக்குச் சென்று அங்கிருந்து AI-3203 ரக விமானம் மூலம் இன்று அதிகாலை 5.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.


மேலதிக விசாரணைகளுக்காகச் சந்தேக நபர்களும் போதைப்பொருள் தொகையும் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Comments
0

MOST READ

காணொளி
இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்!

மஹா கும்பாபிஷேகம்

மஹா கும்பாபிஷேகம்

அம்பாறையில் யானைகளின் அணிவகுப்பு

அம்பாறையில் யானைகளின் அணிவகுப்பு

120 மில்லியன் ரூபா செலவில்  உள்ளக விளையாட்டு அரங்கு!

120 மில்லியன் ரூபா செலவில் உள்ளக விளையாட்டு அரங்கு!

9 வருடங்களைத் தாண்டியும் இடமாற்றங்கள் வழங்கப்படவில்லை!

9 வருடங்களைத் தாண்டியும் இடமாற்றங்கள் வழங்கப்படவில்லை!

ஏறாவூரில் இருவர் மீது சரமாரி வாள்வீச்சு!

ஏறாவூரில் இருவர் மீது சரமாரி வாள்வீச்சு!

வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் அல்ல!

வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் அல்ல!

பணிப்பகிஷ்கரிப்பால் கிழக்கு மாகாணத்தில் கலவையான சூழல்!

பணிப்பகிஷ்கரிப்பால் கிழக்கு மாகாணத்தில் கலவையான சூழல்!

அம்பாறையில் உச்சகட்ட பதற்றம்

அம்பாறையில் உச்சகட்ட பதற்றம்

பிரதேசவாதங்களை தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டு இருக்கிறார்!

பிரதேசவாதங்களை தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டு இருக்கிறார்!

title