Header Logo

வடக்கு
வட மாகாண ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

Mar 26, 2026 - 12:04 PM -

0

வட மாகாண ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

மாகாண கல்வித் திணைக்களம் தமது இடமாற்றக் கோரிக்கைகளைப் பரிசீலனை செய்யாது, மீண்டும் மீண்டும் ஒரே ஆசிரியர்களுக்கே இடமாற்றம் வழங்க தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்து வட மாகாண ஆசிரியர்கள் இன்றையதினம் (26) போராட்டமொன்றை முன்னெடுத்தனர். 

வட மாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவிற்கு முன்பாக ஒன்றுகூடிய ஆசிரியர்கள், பல்வேறு பதாதைகளைத் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர். 

ஏற்கனவே கஷ்டப் பிரதேசங்களில் பணிபுரிந்தோர், நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் குடும்பச் சூழல் காரணமாகத் தூர இடங்களுக்குச் செல்ல முடியாதவர்கள் எனப் பாதிக்கப்பட்ட பல ஆசிரியர்கள் இப்போராட்டத்தில் கலந்துகொண்டனர். 

தமது இடமாற்றம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து மாகாண கல்வித் திணைக்களத்திற்கு மேன்முறையீடு செய்தும், அந்த விண்ணப்பங்களை மாகாண கல்வித் திணைக்களம் பொதுச்சேவைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கவில்லை என ஆசிரியர்கள் இதன்போது குற்றம் சுமத்தினர். 

இதனைத் தொடர்ந்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப செயலாளர் தீபன் திலீசன் உள்ளிட்ட பிரதிநிதிகள், வட மாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் ஆழ்வார்பிள்ளை ஸ்ரீ என்பவரைச் சந்தித்துக் கலந்துரையாடினர். 

இச்சந்திப்பு குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த தீபன் திலீசன், "மாகாண கல்வித் திணைக்களத்தின் ஊடாக எந்தவொரு மேன்முறையீடும் தமக்கு அனுப்பப்படவில்லை என்றும், அவ்வாறு அனுப்பப்பட்டால் மட்டுமே தம்மால் அவற்றைப்பரிசீலிக்க முடியும் என்றும் செயலாளர் தெரிவித்தார்" எனக் குறிப்பிட்டார். 

பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் பதிலைத் தொடர்ந்து, ஆசிரியர்கள் தமது போராட்டத்தை வட மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாகத் தொடர்ந்தனர். 

தமது மேன்முறையீடுகள் பரிசீலிக்கப்பட்டுத் தீர்வு வழங்கப்படும் வரை, தற்போது பணியாற்றும் பாடசாலைகளிலேயே தொடர்ந்து பணியாற்ற அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும், அவ்வாறில்லாத பட்சத்தில் போராட்டங்கள் பல்வேறு வடிவங்களில் தொடரும் எனவும் ஆசிரியர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

--

Comments
0

MOST READ

காணொளி
வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

கடும் மழை ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!

கடும் மழை ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!

அனைவருக்கும் சட்டம் சமன்!

அனைவருக்கும் சட்டம் சமன்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

title