Mar 26, 2026 - 05:40 PM -
0
கடந்த ஒரு வார காலமாக வட மாகாணத்தில் தங்கியிருந்து பல்வேறு சந்திப்புக்களை மேற்கொண்டு வரும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி மார்க்-ஆன்றி பிரான்சிக்கும், (Marc-André Franche) தமிழ்த் தேசியப் பேரவை உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்றையதினம் (26) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாணம் தாவடிப் பகுதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை இச்சந்திப்பு இடம்பெற்றது.
இச்சந்திப்பில் தமிழ்த் தேசியப் பேரவை சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளருமான செல்வராசா கஜேந்திரன், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் மற்றும் முன்னாள் வட மாகாண சபை அமைச்சர் பொ. ஐங்கரநேசன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கை பரப்புச் செயலாளர் மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி நடராஜர் காண்டீபன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இச்சந்திப்பின் போது தற்போதைய அரசியல் சூழல் மற்றும் வடக்கு மக்களின் முக்கிய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
--
