Header Logo

வடக்கு
வட்டுக்கோட்டை வைத்தியசாலை தொடர்பாக பல முறைப்பாடுகள்

Mar 26, 2026 - 06:04 PM -

0

வட்டுக்கோட்டை வைத்தியசாலை தொடர்பாக பல முறைப்பாடுகள்

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலை தொடர்பாக பல்வேறுபட்ட தரப்பினரும் பல தடவைகள் என்னிடம் முறைப்பாடு முன் வைத்தனர். 

இது தொடர்பாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடமும் நான் பல தடவைகள் கூறியுள்ளேன் என யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார். 

இன்றைய தினம் காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், 

அந்த வைத்தியசாலையை தரம் உயர்த்தும் போது அங்கே பணி நியமன திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். அதாவது எத்தனை வைத்தியர்கள் இருக்க வேண்டும், எத்தனை தாதியர்கள் இருக்க வேண்டும், எத்தனை ஊழியர்கள் இருக்க வேண்டும் என்ற கட்டமைப்பு வந்தால் தான் நாங்கள் சுகாதார உத்தியோகத்தரை கேட்கலாம். 

நாங்கள் அது குறித்து நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கின்றோம். அந்த வைத்தியசாலை 24 மணித்தியாலமும் இயங்க வேண்டும் என்றால் ஆகக் குறைந்தது எட்டு தாதியர்கள் அங்கே பணியாற்ற வேண்டும். ஆக அதற்குரிய ஒழுங்குகளை செய்ய வேண்டும். 

நாடளாவிய ரீதியில் எல்லா வைத்தியசாலைகளிலும் தாதியர் பற்றாக்குறை காணப்படுகிறது. ஆகவே அதனை நிவர்த்தி செய்த பின்னர் இந்த வைத்தியசாலையை இயங்க வைப்போம் என்றார்.

 

--

Comments
0

MOST READ

காணொளி
இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்!

மஹா கும்பாபிஷேகம்

மஹா கும்பாபிஷேகம்

அம்பாறையில் யானைகளின் அணிவகுப்பு

அம்பாறையில் யானைகளின் அணிவகுப்பு

120 மில்லியன் ரூபா செலவில்  உள்ளக விளையாட்டு அரங்கு!

120 மில்லியன் ரூபா செலவில் உள்ளக விளையாட்டு அரங்கு!

9 வருடங்களைத் தாண்டியும் இடமாற்றங்கள் வழங்கப்படவில்லை!

9 வருடங்களைத் தாண்டியும் இடமாற்றங்கள் வழங்கப்படவில்லை!

ஏறாவூரில் இருவர் மீது சரமாரி வாள்வீச்சு!

ஏறாவூரில் இருவர் மீது சரமாரி வாள்வீச்சு!

வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் அல்ல!

வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் அல்ல!

பணிப்பகிஷ்கரிப்பால் கிழக்கு மாகாணத்தில் கலவையான சூழல்!

பணிப்பகிஷ்கரிப்பால் கிழக்கு மாகாணத்தில் கலவையான சூழல்!

அம்பாறையில் உச்சகட்ட பதற்றம்

அம்பாறையில் உச்சகட்ட பதற்றம்

பிரதேசவாதங்களை தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டு இருக்கிறார்!

பிரதேசவாதங்களை தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டு இருக்கிறார்!

title