Mar 27, 2026 - 10:52 AM -
0
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம், ருத்ரபிரயாக் மாவட்டத்தில், மலைக்கிராமங்களில் வசிக்கும் கர்ப்பிணி பெண்களை அவசர காலங்களில் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல இலவச ஹெலிகாப்டர் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், ஜக்கோலி பகுதியைச் சேர்ந்த உதினா என்ற பெண். மாவட்ட வைத்தியசாலைக்கு ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டார்.
வீதி வசதி இல்லாத மற்றும் போக்குவரத்து கடினமான கிராமங்களில் வசிக்கும் பெண்களுக்கு, பிரசவ நேரத்தில் உரிய வைத்திய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய இந்தச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மலைக் கிராமங்களில் பிரசவத்தின்போது தாய் - சேய் இறப்பு விகிதத்தைக் குறைக்கவும், பாதுகாப்பான பிரசவத்தை உறுதி செய்யவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
