Header Logo

செய்திகள்
வெப்பமான வானிலை மே மாதம் வரை தொடரும்

Mar 27, 2026 - 12:42 PM -

0

வெப்பமான வானிலை மே மாதம் வரை தொடரும்

தற்போது நிலவும் வெப்பமான வானிலை எதிர்வரும் மே மாதம் வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவிக்கையில், தென்மேல் பருவக்காற்று மே மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ளதால், அதுவரை நிலவும் வெப்பமான வானிலை அதன் பின்னரே ஓரளவு குறையும் என எதிர்பார்க்கப்படுவதாகக் குறிப்பிட்டார். 

தற்போதைய சூழலில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெப்பமான வானிலை அதிகமாகக் காணப்படும். குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடும் வெப்பம் நிலவும் என அவர் தெரிவித்தார். 

தற்போது முதலாவது இடைப்பருவப் பெயர்ச்சிக் காலம் ஆரம்பமாகியுள்ளது. இந்த காலப்பகுதியில் குறிப்பிட்ட திசையிலிருந்து காற்று வீசாது என்பதுடன், காற்றின் வேகமும் மிகக் குறைவாகவே இருக்கும் என அவர் சுட்டிக்காட்டினார். 

இக்காலப்பகுதியில் சூரியன் இலங்கைக்கு நேர் உச்சியில் காணப்படுவதாலும், மேகமூட்டம் குறைவாக இருப்பதாலும் கடல் மற்றும் நிலப்பரப்பு வெப்பமடைந்து வெப்ப அலைகளை வெளியிடுகின்றன. இதன் மூலம் வளிமண்டலம் மேலும் வெப்பமடைகிறது. 

தினமும் முற்பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரையிலான காலப்பகுதியில் வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும். 

எனவே, அந்த நேரத்தில் வெளிப்புறச் செயல்பாடுகளை முடிந்தவரை தவிர்த்துக்கொள்ளுமாறும், அடிக்கடி நீர் அருந்துமாறும் அவர் அறிவுறுத்தினார்.

Comments
0

MOST READ

காணொளி
அமைச்சர் அதிரடி!

அமைச்சர் அதிரடி!

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக வீழ்ச்சி

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக வீழ்ச்சி

மட்டக்களப்பில் கொதித்தெழுந்த மக்கள்!

மட்டக்களப்பில் கொதித்தெழுந்த மக்கள்!

பொலிஸ் பாதுகாப்புடன் நடத்தப்பட்ட யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

பொலிஸ் பாதுகாப்புடன் நடத்தப்பட்ட யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்!

மஹா கும்பாபிஷேகம்

மஹா கும்பாபிஷேகம்

அம்பாறையில் யானைகளின் அணிவகுப்பு

அம்பாறையில் யானைகளின் அணிவகுப்பு

120 மில்லியன் ரூபா செலவில்  உள்ளக விளையாட்டு அரங்கு!

120 மில்லியன் ரூபா செலவில் உள்ளக விளையாட்டு அரங்கு!

9 வருடங்களைத் தாண்டியும் இடமாற்றங்கள் வழங்கப்படவில்லை!

9 வருடங்களைத் தாண்டியும் இடமாற்றங்கள் வழங்கப்படவில்லை!

ஏறாவூரில் இருவர் மீது சரமாரி வாள்வீச்சு!

ஏறாவூரில் இருவர் மீது சரமாரி வாள்வீச்சு!

title