Header Logo
Mogo Academy

விளையாட்டு
இம்பேக்ட் வீரர் விதி 2027 வரை தொடரும்!

Mar 27, 2026 - 05:58 PM -

0

இம்பேக்ட் வீரர் விதி 2027 வரை தொடரும்!
Mobitel inner

ஐபிஎல் போட்டிகளில் இம்பேக்ட் வீரர் விதி, வரும் 2027 ஆம் ஆண்டு வரை தொடரும் என, ஐபிஎல் அதிகாரிகள் கூறியுள்ளனர். ஐபிஎல் போட்டிகளில் இம்பேக்ட் வீரர் விதி, கடந்த 2023 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 

அதன்படி, போட்டியில் ஆடும் இரு அணிகளும் போட்டி துவங்கும் முன், தலா 5 மாற்று வீரர்கள் கொண்ட பட்டியலை அளிக்க வேண்டும். போட்டியின் துவக்கத்தில் அல்லது ஓவர் முடியும்போது, அல்லது விக்கெட் விழுந்தபின், ஏதாவது ஒரு வீரருக்கு மாற்றாக, இந்த 5 வீரர்களில் ஒருவரை போட்டியில் விளையாடும் அணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். 

இதன் மூலம், சூழ்நிலைக்கு ஏற்றவாறு, ஒரு பேட்டரையோ, அல்லது பவுலரையோ போட்டியின் இடையே அழைத்து ஆட வைக்க முடியும். 

போட்டியின்போது, ஏதாவது ஒரு மாற்று வீரரை மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு வீரர் அனுப்பப்பட்டு அவருக்கு பதில் வேறு வீரர் பயன்படுத்தப்பட்டால், வெளியே சென்ற வீரரை மீண்டும் பயன்படுத்த முடியாது. இம்பேக்ட் வீரர் விதிக்கு, ரோகித் சர்மா, அக்சர் படேல் உள்ளிட்ட பல்வேறு வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

இம்பேக்ட் வீரர் விதியால், அணியின் சமநிலை பாதிக்கப்பட்டு வெற்றி வாய்ப்பில் மாற்றம் ஏற்படும் சூழல் ஏற்படுவதாக அவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், இம்பேக்ட் வீரர் விதி, வரும் 2027 ஆம் ஆண்டு வரை தொடரும் என்றும், அதன்பின்னர் அது குறித்து மறுஆய்வு செய்து தக்க முடிவு எடுக்கப்படும் என்றும், ஐபிஎல் அதிகாரிகள் கூறியுள்ளனர்.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara