Header Logo

செய்திகள்
சப்புகஸ்கந்தையில் சிக்கிய 5 கோடி பெறுமதியான போதைப்பொருள்

Mar 27, 2026 - 08:32 PM -

0

சப்புகஸ்கந்தையில் சிக்கிய 5 கோடி பெறுமதியான போதைப்பொருள்

சப்புகஸ்கந்தைப் பகுதியில் 5 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் தொகையுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேக நபரிடமிருந்து ஹெரோயின், ஐஸ், கொக்கைன் மற்றும் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக களனி பிராந்திய குற்றத் தடுப்புப் பணியகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

அவற்றில் ஒரு கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின், 515 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 565 கிராம் கொக்கைன் ஆகியன அடங்குவதாக பொலிஸ் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். 

துபாயில் உள்ள இரு போதைப்பொருள் கடத்தல்காரர்களால் குறித்த சந்தேக நபருக்கு இந்தப் போதைப்பொருட்கள் வழங்கப்பட்டமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

களனி பிராந்திய குற்றத் தடுப்புப் பணியகத்தின் பொறுப்பதிகாரியின் தலைமையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Comments
0

MOST READ

காணொளி
அமைச்சர் அதிரடி!

அமைச்சர் அதிரடி!

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக வீழ்ச்சி

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக வீழ்ச்சி

மட்டக்களப்பில் கொதித்தெழுந்த மக்கள்!

மட்டக்களப்பில் கொதித்தெழுந்த மக்கள்!

பொலிஸ் பாதுகாப்புடன் நடத்தப்பட்ட யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

பொலிஸ் பாதுகாப்புடன் நடத்தப்பட்ட யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்!

மஹா கும்பாபிஷேகம்

மஹா கும்பாபிஷேகம்

அம்பாறையில் யானைகளின் அணிவகுப்பு

அம்பாறையில் யானைகளின் அணிவகுப்பு

120 மில்லியன் ரூபா செலவில்  உள்ளக விளையாட்டு அரங்கு!

120 மில்லியன் ரூபா செலவில் உள்ளக விளையாட்டு அரங்கு!

9 வருடங்களைத் தாண்டியும் இடமாற்றங்கள் வழங்கப்படவில்லை!

9 வருடங்களைத் தாண்டியும் இடமாற்றங்கள் வழங்கப்படவில்லை!

ஏறாவூரில் இருவர் மீது சரமாரி வாள்வீச்சு!

ஏறாவூரில் இருவர் மீது சரமாரி வாள்வீச்சு!

title