Header Logo
Mogo Academy

விளையாட்டு
ஐபிஎல் 2026:  RCB அணி அபார வெற்றி!

Mar 29, 2026 - 07:41 AM -

0

ஐபிஎல் 2026:  RCB அணி அபார வெற்றி!
Mobitel inner

2026 இந்தியன் பிரீமியர் லீக் தொடர் நேற்றைய தினம் (28) ஆரம்பமான நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்ற முதலாவது போட்டியில், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. 

பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூரு அணியின் அழைப்பிற்கு இணங்க, முதலில் துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 201 ஓட்டங்களைப் பெற்றது. 

துடுப்பாட்டத்தில் அந்த அணியின் தலைவர் இஷான் கிஷன் 80 ஓட்டங்களையும், அனிக்ட் வர்மா 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் ஜேக்கப் டஃபி மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

202 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 15.4 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியை உறுதி செய்தது. அதிரடியாக விளையாடிய விராட் கோலி 69 ஓட்டங்களையும், தேவ்தத் படிக்கல் 61 ஓட்டங்களையும் குவித்தனர். 

ஹைதராபாத் அணி சார்பாக பந்துவீச்சில் டேவிட் பெயின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சார்பாக விளையாடிய எஷான் மாலிங்க 2 ஓவர்களில் 35 ஓட்டங்களை எதிரணிக்கு வழங்கியிருந்தார்.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara