Header Logo
Mogo Academy

விளையாட்டு
முதல் போட்டியில் வென்ற மும்பை

Mar 30, 2026 - 07:58 AM -

0

 முதல் போட்டியில் வென்ற மும்பை
Mobitel inner

2026 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் நேற்றைய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. 

இதன்படி முதலில் துடுப்பாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 220 ஓட்டங்களைப் பெற்றது. 

அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக அணித் தலைவர் அஜிங்கே ரஹானே 67 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். 

பந்துவீச்சில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் சர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுக்களை அதிகபட்சமாக கைப்பற்றினார். 

இந்நிலையில் 221 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 19.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து போட்டியில் வெற்றி பெற்றது. 

மும்பை அணிசார்பில் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி 78 ஓட்டங்களையும், ரியான் ரிக்கல்டன் 81 ஓட்டங்களையும் பெற்று அணியின் வெற்றிக்கு பங்காற்றினர். 

இதன்மூலம் 2012 ஆம் ஆண்டுக்கு பின்னர் தொடக்க ஆட்டத்தில் மும்பை அணி வெற்றிபெறுவது இதுவே முதல் சந்தர்ப்பமாகும்.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara