Header Logo
Mogo Academy

விளையாட்டு
கோலியின் நீண்ட கால சாதனையை முறியடித்த ரோகித் சர்மா

Mar 30, 2026 - 11:48 AM -

0

கோலியின் நீண்ட கால சாதனையை முறியடித்த ரோகித் சர்மா
Mobitel inner

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை வீரர் ரோகித் சர்மா 78 ஓட்டங்களை குவித்ததன் மூலம் விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார். 
 

ஐபிஎல் தொடரின் 19 ஆவது சீசனின் நேற்று (29) இடம்பெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. 

இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. 

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 220 ஓட்டங்களை குவித்தது.

 

இதனையடுத்து துடுபெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 19.1 ஓவரில் 224 ஓட்டங்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் மும்பை வீரர் ரோகித் சர்மா 78 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். இதன்மூலம் ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்கு எதிராக அதிக ஓட்டங்களை குவித்த வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை ரோகித் முறியடித்துள்ளார். 

ரோகித் சர்மா கொல்கத்தாவுக்கு எதிராக இதுவரை 1,161 ஓட்டங்களை (36 ஆட்டம்) பெற்றுள்ளார். ஆர்சிபி வீரர் விராட் கோலி பஞ்சாப்புக்கு எதிராக 1,159 ஓட்டங்களை எடுத்திருந்தார் குறிப்பிடத்தக்கது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara