Header Logo

விளையாட்டு
ஐபிஎல் வரலாற்றில் சாதனை படைத்த மும்பை இந்தியன்ஸ்!

Mar 30, 2026 - 06:25 PM -

0

ஐபிஎல் வரலாற்றில் சாதனை படைத்த மும்பை இந்தியன்ஸ்!

ஐபிஎல் 2026 தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் கேகேஆர் நிர்ணயித்த 221 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை அணி19.1 ஓவர்களிலேயே இலக்கை அடைத்து வெற்றி பெற்றது. இது ஐபிஎல் வரலாற்றில் மும்பை அணியின் அதிகபட்ச வெற்றிகரமான ரன் சேஸிங் ஆகும். 

இந்த வெற்றியின் மூலம், மும்பை இந்தியன்ஸ் அணி கிரிக்கெட் வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. ஒரு குறிப்பிட்ட எதிரணிக்கு எதிராக 25 வெற்றிகளைக் குவித்த முதல் ஐபிஎல் அணி என்ற பெருமையை மும்பை பெற்றுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக சென்னை, டெல்லி அணியை 21 முறை மும்பை அணி வீழ்த்தி அதற்கு அடுத்த இடத்தில் உள்ளது. 

மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இதுவரை 36 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் மும்பை அணி 25 வெற்றிகளை பெற்றுள்ளது. கொல்கத்தா அணி வெறும் 11 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 

மேலும் மும்பை வான்கடே மைதானத்தில் கேகேஆர் அணிக்கு எதிராக விளையாடிய 13 போட்டிகளில் 11 இல் மும்பை வெற்றி பெற்றுள்ளது. இது ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் ஒரு அணிக்கு எதிராகப் பெறப்பட்ட அதிகபட்ச வெற்றியாகும். 

2012 ஆம் ஆண்டிற்குப் பிறகு, கடந்த 14 ஆண்டுகளாகத் தனது முதல் லீக் போட்டியில் வெற்றி பெற முடியாமல் தவித்து வந்த மும்பை இந்தியன்ஸ், இந்த வரலாற்று வெற்றியின் மூலம் அந்த மோசமான சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

title