Header Logo

வடக்கு
தந்தை செல்வாவின் 128 ஆவது ஜனனதினம்!

Mar 31, 2026 - 11:35 AM -

0

தந்தை செல்வாவின் 128 ஆவது ஜனனதினம்!

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகத் தலைவர் தந்தை செல்வாவின் 128 ஆவது பிறந்ததினம் இன்று (31) மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. 

மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள தந்தை செல்வா ஞாபகார்த்த பூங்காவில், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்புக் கிளைத் தலைவர் மற்றும் முன்னாள் மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் நினைவு நிகழ்வுகள் நடைபெற்றன. 

இதன்போது, தந்தை செல்வாவின் நினைவுத் தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு, ஈகச்சுடர் ஏற்றப்பட்டதுடன் மலரஞ்சலியும் அகவணக்கமும் செலுத்தப்பட்டன. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன், ஞானமுத்து ஸ்ரீநேசன், இளையதம்பி சிறிநாத் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானத்துறை விரிவுரையாளர் நடராசா புஸ்பராசா உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். 

இதேவேளை, யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் உருவச் சிலையடிவிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. 

இதில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம், பதில் பொதுச்செயலாளர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு சிலைக்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர்.

--

Comments
0

MOST READ

காணொளி
வைத்தியர்களின் அடையாள வேலைநிறுத்தம்!

வைத்தியர்களின் அடையாள வேலைநிறுத்தம்!

மண்டைதீவு புதைகுழி வழக்கு மீண்டும் ஜூலை 28 நீதிமன்றில்!

மண்டைதீவு புதைகுழி வழக்கு மீண்டும் ஜூலை 28 நீதிமன்றில்!

அவசரக்கால தடைச்சட்டம் தேவையில்லை!

அவசரக்கால தடைச்சட்டம் தேவையில்லை!

மட்டக்களப்பை உலுக்கிய கடத்தல் சம்பவம்!

மட்டக்களப்பை உலுக்கிய கடத்தல் சம்பவம்!

மட்டக்களப்பை உலுக்கிய கடத்தல் சம்பவம்!

மட்டக்களப்பை உலுக்கிய கடத்தல் சம்பவம்!

சட்டமா அதிபரின் தலையீட்டுக்கு நீதிமன்றில் எதிர்ப்பு!

சட்டமா அதிபரின் தலையீட்டுக்கு நீதிமன்றில் எதிர்ப்பு!

தீர்த்தக்குட பவனி கோலாகலம்!

தீர்த்தக்குட பவனி கோலாகலம்!

குருக்கள்மடம் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்!

குருக்கள்மடம் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்!

அந்தப் பாராளுமன்ற உறுப்பினரை ஒரு மனநோயாளியாகவே பார்க்கிறோம்!

அந்தப் பாராளுமன்ற உறுப்பினரை ஒரு மனநோயாளியாகவே பார்க்கிறோம்!

மீனவர் பிரச்சினையில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்!

மீனவர் பிரச்சினையில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்!

title